வெள்ளி, 30 ஜூன், 2017

BSNL -ன் 666 பிளான் அறிமுகம்: அளவற்ற அழைப்பு; Daily 2GB Internet Data.

ஜியோவுக்கு எதிரான போட்டியில் ஏற்கனவே களமிறங்கி சக்கைப் போடு போடும்  BSNL தற்போது 666 பிளானை அறிமுகம் செய்துள்ளது.

ப்ரீபெய்ட் திட்டத்துக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ரூ.666 திட்டத்தில், எந்தவொரு செல்போன் எண்ணுக்கும் அளவற்ற அழைப்பு மற்றும் தினமும் 2ஜிபி டேட்டா வசதியை வழங்குகிறது. அதுவும் இந்த சலுகை 60 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

மேலும், பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள், ரூ.666 திட்டத்தைத் தவிர, ரூ.349, ரூ.333, ரூ.444 என பிற திட்டங்களையும் மாற்றிக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

Railway Ticket Cancel - ஊருக்குப் போகும் பிளானை மாற்றுவதால் மட்டும் ரூ.1400 கோடி வருமானம் ஈட்டும் ரயில்வே!!

ரயிலில் முன்பதிவு செய்யும் டிக்கெட்டுகளை, பயணிகள் ரத்து செய்வதன் மூலம் மட்டுமே ரூ.1400 கோடியை  வருவாயாக ஈட்டி வருகிறது ரயில்வே துறை.

கடந்த ஆண்டை விட, ரயில் டிக்கெட் ரத்து செய்வதற்கான கட்டணத்தை உயர்த்தியதன் மூலம் 2016-17ம் ஆண்டில் ரயில்வே நிர்வாகம் ரூ.1400 கோடியை ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 25.29 சதவீதம் அதிகம்.

வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு பணி: ஃபேஸ்புக்குடன் இணைந்த தேர்தல் ஆணையம் !!

ஃபேஸ்புக்குடன் இணைந்து வாக்காளர் அடையாள அட்டைக்கான ஆள்சேர்ப்பு முகாமை நடத்த உள்ள இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டையை பதிவு செய்வதற்கான நினைவூட்டலுக்காக ஃபேஸ்புக்குடன் தேர்தல் ஆணையம் கைகோர்த்துள்ளது. அதன்படி 18 வயது பூர்த்தியடைந்தவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைக்காக பெயர்
சேர்த்தல் குறித்து நினைவூட்டலை ஃபேஸ்புக் வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் 4ம் தேதி வரை வழங்கும்.

7வது ஊதியக்குழு மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு - அரசாணை வெளியீடு.

ஊதியக்குழு மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு.. G.O.Ms.No.189 Dt: June 27, 2017   OFFICIAL COMMITTEE – Constitution ofan Official Committee to examine the revision of Pay scales / Pension to the State Government employees and pensioners following the decisions of the Central Government on the recommendations of the Seventh Central Pay Commission extension to 30.9.2017 –Ordered.

GO 127-தொடக்க நடுநிலைப்பள்ளிகள்-பள்ளி வேலை நாட்கள் 210 நாட்களாக மாற்றப்பட்டதற்கான அரசாணை.

தமிழ் பல்கலைக்கழகம் சுற்றறிக்கை - B.Ed கற்றல் கற்பித்தல் பயிற்சியை விடுப்பின்றி அந்தந்த ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளியிலேயே மேற்கொள்ளலாம்.


BIG NEWS :-மாற்றுத்திறனாளிகள் 50% மானியவிலையில் பெட்ரோல்/டீசல் பெறலாம்.

INSPIRE AWARD - க்கு பதிவு செய்யும் முறை.

இனி வாட்ஸ்அப் மூலமே மெயில் அனுப்பலாம்: இது லேட்டஸ்ட் அப்டேட்!

இன்றைய காலத்தில் வாட்ஸ்அப் இல்லாத ஸ்மார்ட்ஃபோன்களையோ அல்லது நபர்களையோ காண்பது அரிது. உலகளவில் தற்போது புதிய டிரெண்டாக உருவெடுக்கும் வாட்ஸ்அப் நாளுக்கு நாள் புதிய அப்டேட்களை தருகிறது. அதன்படி, தற்போது வாட்ஸ்அப்பில் உள்ள எமோஜி, பயனாளர்களை அதிகளவில் கவர்ந்து வருகிறது. 

இதன் காரணமாக பயனாளர்களை மேலும் கவர வாட்ஸ்அப் பல்வேறு எமோஜிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. இவை முதற்கட்டமாக பீட்டா பயனாளர்களுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி இமெயில் உள்ளிட்ட பல கோப்புகளை வாட்ஸ்அப் வழியாகவே அனுப்பும் வசதியையும் இதனுடன் அறிமுகப்படுத்தி உள்ளது.

+2 மற்றும் 10-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தத்தில் குளறுபடி : 3,000 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்.

விடைத்தாள் திருத்தத்தில் குளறுபடி செய்த, 3,000 ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, அரசு தேர்வுத்துறை, நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பிளஸ் 2மற்றும், 10ம் வகுப்புக்கு, அரசு தேர்வுத்துறை மூலம், பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில், 20 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். இதில், மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை வைத்தே, அவர்களின் உயர்கல்வி நிர்ணயிக்கப்படுகிறது. 

இந்த முறை பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு தேர்வுகளில், பல மாணவர்களுக்கு, மதிப்பெண்ணில் குளறுபடி ஏற்பட்டது. அவர்களது மதிப்பெண் பிழைகளை சரி செய்ய, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு அவகாசம் வழங்கப்பட்டது. 

மருத்துவ படிப்பு விண்ணப்பத்தில் குழப்பம் : விபரங்கள் நிரப்ப முடியாமல் திணறல்.

மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களில் கேட்கப்பட்ட விபரங்களை நிரப்ப, போதிய இடம் இல்லாததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

'நீட்' தேர்வு அடிப்படையில் தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது. அரசு, சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் உள்ள இடங்களுக்கு விண்ணப்பம் வினியோகம் நடக்கிறது. மதுரை உட்பட 22 அரசு மருத்துவக் கல்லுாரிகளில் இந்த விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுகின்றன.

மத்திய ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பு 3 ம்தேதி ஆன்லைன் பதிவ துவக்கம்.

மருத்துவ சேர்க்கையில், அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு, ஜூலை, 3 முதல், ஆன் லைனில் விண்ணப்ப பதிவு துவங்குகிறது. 'நீட்' தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, அகில இந்திய அளவில் தர வரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அவர்களில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு, தனியாக தரவரிசை பட்டியல் வெளியாகும்.

How to link your Aadhaar with PAN by sending an sms in Tamil?



ஜூலை1-க்குள் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் எஸ்எம்எஸ் மூலமாக எப்படி இணைப்பது?

ஆதார் கார்டுடன் பான் கார்டினை இணைப்பதை மேலும் எளிமையாக்கும் விதமாக வருமான வரித்துறை எஸ்எம்எஸ் அதற்கு முக்கியமாகப் பான் கார்டு எண், ஆதார் கார்டு எண் போன்றவற்றைக் கையில் வைத்து இருக்க வேண்டும்.

மருத்துவ படிப்பில் 85 சதவீத இடஒதுக்கீடு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவப் படிப்புகளுக்காக தமிழக அரசு கடந்த 22-ந்தேதி ஒரு அரசாணை வெளியிட்டது. அதில், தமிழகத்தில் உள்ள மருத்துவ படிப்புகளில் உள்ள இடங்களில் 85 சதவீதம் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும், மீதமுள்ள 15 சதவீதம் சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட மத்திய பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும் வழங்கப்படும்’ என்றும் கூறப்பட்டிருந்தது.


இந்த அரசாணையை ரத்துசெய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், தஞ்சாவூரை சேர்ந்த தர்னிஷ்குமார் உள்பட பல மாணவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அந்த மனுவில், ‘மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களிடையே எந்த ஒரு பாகுபாடும் இருக்கக்கூடாது என்பதற்காகத் தான் ‘நீட்’ தேர்வு நாடு முழுவதும் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் தான் மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறவேண்டும். ஆனால், மாணவர்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்தும் விதமாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணையால், சி.பி.எஸ்.இ. மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே, இந்த அரசாணையை ரத்து செய்வதுடன், இடைக்கால தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்குகள் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், ‘இந்த அரசாணை தேவையில்லாமல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த அரசாணைக்கு தடைவிதிக்க வேண்டும்’ என்று வாதிட்டனர்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார் மாநில தேர்தல் ஆணையர் பேட்டி.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் நேற்று நெல்லை சென்றார். அப்போது நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் அலுவலக வளாகத்தில், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வியாழன், 29 ஜூன், 2017

ஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கு அரசு தடை : பி.ஆர்க்., சேர மாணவர்களுக்கு சிக்கல்.



தமிழகத்தில், கவுன்சிலிங் மூலம், பி.ஆர்க்., படிப்பில் சேர, மத்திய அரசின், ஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கு, தமிழக அரசு தடை விதித்துள்ளது. 

தமிழகத்தில், அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 53 கல்லுாரிகளில், பி.ஆர்க்., படிப்பிற்கு, கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் சேர்க்கப்படு கின்றனர். மொத்தம், 2,720 இடங்களுக்கு கவுன்சிலிங் நடக்கிறது. தமிழகத்தில், 2,009 பேர் மட்டுமே, 'நாட்டா' என்ற தேசிய அளவிலான, ஆர்க்கிடெக்சர் நுழைவு தேர்வில் தகுதி பெற்றுள்ளனர். 

PG TRB:முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வு: தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு எதை கொண்டு வர வேண்டும்?



ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 2.7.2017 அன்று நடைபெற உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டி எழுத்து தேர்வுக்காக 2 லட்சத்து 18 ஆயிரத்து 491 தேர்வர்கள் விண்ணப்பித்தனர். இந்த தேர்வானது 32 மாவட்டங்களில் உள்ள 601 மையங்களில் நடைபெற இருக்கிறது.

ஜனவரி மாதத்துக்குள் புதிய பாடத்திட்டம் தயார் அதிகாரி தகவல்.

1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து பாடத்திட்டங்களும் மாற்றப்படும் என்று அரசு அறிவித்தது. இதையொட்டி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பாடத்திட்டங்களை மாற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

புதிய ரூ.200 நோட்டுகள் அச்சிடும் பணி துவக்கம்.

புதிய 200 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணியை ரிசர்வ் வங்கி துவக்கியுள்ளது. இப்புதிய நோட்டுகள் விரைவில் புழக்கத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊழயை ஒழிக்கும் பொருட்டு ரூ. 500 மற்றும் ரூ1000 நோட்டுகள் செல்லாது என கடந்த ஆண்டு நவ., 8ம் தேதி மத்திய அரசு திடீர் அறிவிப்பு வெளியிட்டது. தொடர்ந்து பண நெருக்கடியை சமாளிக்க, பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட்டது.

24 போலி பல்கலைகள் : யு.ஜி.சி., பகிரங்கம்.

நாடு முழுவதும், 24 போலி பல்கலைகள் செயல்படுகின்றன; இப்பல்கலைகள் வழங்கும் சான்றிதழ்களுக்கு எவ்வித அங்கீகாரம் இல்லை' எனக் கூறி, பல்கலை மானியக்குழு பட்டியலை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

மருத்துவ படிப்புக்கு 2-வது நாளில் 11 ஆயிரம் விண்ணப்பங்கள் வினியோகம்.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு 2017-2018-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும், கோவை இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியிலும் நேற்று முதல் வினியோகம் செய்யப்பட்டன.

புதன், 28 ஜூன், 2017

பி.இ., 2ம் ஆண்டு 30-ல் கவுன்சிலிங் துவக்கம்.

காரைக்குடி: பி.இ., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்வதற்கான கவுன்சிலிங் காரைக்குடி அழகப்ப செட்டியார், இன்ஜி., கல்லுாரியில் ஜூன், 30-ல் துவங்கி, ஜூலை 10- வரை நடக்கிறது.

டிப்ளமா, பி.எஸ்சி., முடித்தவர்கள், பி.இ., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்ந்து படிப்பதற்கான விண்ணப்ப வினியோகம், மே 17-ல் துவங்கியது. ஜூன் 19,- வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 13 ஆயிரத்து, 69 பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான கவுன்சிலிங் வரும், 30-ல் துவங்குகிறது.

ஜனவரி முதல் டிசம்பர் வரை புதிய நிதியாண்டு !!

2018 முதல் நிதியாண்டு மாறுகிறது.


150 ஆண்டு கால நடைமுறையில் மாற்றம் கொண்டு வருகிறது மத்திய அரசு.

மருத்துவம் படிக்க விண்ணப்ப வினியோகம் கடைசி நாள் ஜூலை 8-ந்தேதி.

தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகள் 
படிக்க அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளிலும், கோவை 
இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரியிலும் விண்ணப்பம் நேற்று 
வழங்கப்பட்டது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு 
மருத்துவக்கல்லூரியில் டீன் டாக்டர் வசந்தாமணி விண்ணப்ப 
வினியோகத்தை தொடங்கிவைத்தார்.

தமிழக அரசுக்கு மாண்புமிகு நீதிபதி கிருபாகரன் முன்வைத்த 20 கேள்விகள்.

அரசு பள்ளிகளில், அரசு ஊழியர்களின் குழந்தைகளை சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பான வழக்கில்.

தமிழக அரசுக்கு நீதிபதி கிருபாகரன் முன்வைத்த 20 கேள்விகள்:

பி.ஆர்க்., அட்மிஷன் விபரம் இணையதளத்தில் வெளியீடு.

பி.ஆர்க்., 'அட்மிஷன்' விபரங்கள், அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியாகின. அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள, 53 ஆர்க்கிடெக்ட் கல்லுாரிகளில், 2,760 பி.ஆர்க்., இடங்களுக்கு, தமிழக அரசின் சார்பில், ஒற்றை சாளர மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. 

ஐ.டி.ஐ., கவுன்சிலிங்: விபரம் இணைய தளத்தில் வெளியீடு.

தமிழகத்தில், ஐ.டி.ஐ., நிறுவனங்களில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்கள், கவுன்சிலிங் விபரத்தை, இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார், ஐ.டி.ஐ., நிறுவனங்களில், 2017க்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஜூன், 23ல் துவங்கியது. 

'நீட்' தேர்வு பயிற்சி மையங்களுக்கு மவுசு : மதிப்பிழக்கிறது பிளஸ் 2 மதிப்பெண்.

'நீட்' தரவரிசை பட்டியலின்படி மட்டுமே, மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதால், 'நீட்' தேர்வு பயிற்சி மையங்களுக்கு, மவுசு அதிகரித்துள்ளது. 'எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப்புகளுக்கு, 'நீட்' தகுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே, மாணவர் சேர்க்கை நடத்தப்படும்' என, தமிழக அரசு அறிவித்துளளது. 

செவ்வாய், 27 ஜூன், 2017

தமிழ்நாட்டில் MBBS படிப்பிற்கான Applications கிடைக்கும் இடங்களின் விபரங்கள்...!

2017-2018ஆம் ஆண்டு எம்பிபிஎஸ்/பிடிஎஸ் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தமிழ்நாட்டில் வழங்கப்படும் இடங்கள் விபரங்கள்.

2017-2018ஆம் ஆண்டிற்கு தமிழ் நாட்டிலுள்ள அரசு மற்றும் சுயநிதி (தனியார்) மருத்துவம், பல் மருத்துவம் பட்டப்படிப்பிற்கு ஒற்றை சாளர முறையில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் தமிழ்நாடு முழுவதும் வழங்கப்படுகின்றன.

உடல் எடையை குறைக்க நினைக்கும்போது நாம் செய்யக்கூடாதது என்னென்ன?

இப்போதைய இளம் வயதினருக்கு தலையாய பிரச்சனையாக இருப்பது அதிகரித்த உடல் எடையை எப்படி குறைப்பது என்று தான்.
ஆனால், அதற்கென முறையான முயற்சிகளை எடுக்காமல், உண்ணும் உணவின் அளவை குறைத்துவிட்டு, தினமும் நீண்டநேரம் தூங்கினால் எடையை குறைத்துவிடலாம் என்ற நம்பிக்கை அதிகமாக நிலவுகிறது.

விரைவில் (WhatsApp) வாட்ஸ்ஆப் செயலியிலும் பணம் அனுப்பும் வசதி !!

தகவல் அனுப்பப் பயன்படும் செயலியான வாட்ஸ்ஆப் பண யூபிஐ மூலமாகப் பணப் பரிமாற்றம் செய்வதற்காக இந்திய வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.

இந்த யூபிஐ சேவையின் மூலமாக மொபைல் இயங்குதளத்தைப் பயன்படுத்தி உடனடியாக இரண்டு வங்கி கணக்கு இடையில் பணப் பரிமாற்ற செய்ய முடியும்.
எஸ்பிஐ வங்கியுடன் பேச்சுவார்த்தை

உங்கள் வங்கி கணக்கு புத்தகங்களில் புதிதாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!.

நிறைய வங்கிகள் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்குகளைக் குறுக்குப் பரிசோதனை செய்யக் கூடிய பணப் பரிவர்த்தனைகளின் போதுமான விவரங்களை வங்கிக் கணக்குப் புத்தகங்கள் மற்றும் / அல்லது வங்கிக் கணக்கு அறிக்கைகளில் வழங்குவதில்லை என்று ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா சொல்கிறது.

மருத்துவ விடுப்பு எடுத்தால் அதற்கு இணையாண ஈட்டிய விடுப்பு நாட்களை கழிக்க வேண்டியது இல்லை.


சிவில் சர்வீசஸ் தேர்வு அட்டவணை வெளியீடு.

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உட்பட 24 வகையான இந்திய உயர் பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு அட்டவணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.


மத்திய அரசின் யு.பி.எஸ்.சி., என்ற மத்திய குடிமையியல் தேர்வு பணிகள் ஆணையத்தின் சார்பில், பல வகை போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இவற்றில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உட்பட 24 விதமான பதவிகளுக்கு, சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்படுகிறது. அடுத்த ஆண்டுக்கான தேர்வு தேதி குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது.

அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பம் வினியோகம்.

தமிழ்நாட்டில் 22 அரசு மருத்துவ கல்லூரிகள், சிதம்பரம் 
ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி, கோவை இ.எஸ்.ஐ. 
மருத்துவ கல்லூரி ஆகியவைகளில் 3,050 எம்.பி.பி.எஸ். 
இடங்கள் உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 
15 சதவீதம் போக, எஞ்சிய இடங்களில் மாநில பாடத்திட்டத்தில் 
படித்த மாணவர்களுக்கு 85 சதவீதமும், மத்திய கல்வி வாரிய 
திட்டத்தில் படித்த தமிழக மாணவர்களுக்கு 15 சதவீத 
இடங்களும் ஒதுக்கப்படும்.

'நீட்' தேர்வு எழுதி ரேங்க் பெற்ற மாணவர்களுக்கு 'சீட்' எப்படி?

பெங்களூரு: மருத்துவம், பல் மருத்துவ சீட்களுக்காக, 'நீட்' தேர்வு எழுதி ரேங்க் பெற்ற மாணவர்களுக்கு, அரசு கோட்டாவில், 'சீட்' கிடைக்குமா, இல்லையா; 'சீட்' பெறுவது எப்படி? என்பது போன்ற பல விதமான கேள்விகளுக்கு விரைவில் விடை கிடைக்கும்.

கல்விக்கடன் வழங்குவதை ஏழை மாணவர்களின் கனவை நிறைவேற்றும் சேவையாக கருத வேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் எஸ்.சம்பத்குமார். இவர், 
சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், நான் விவசாய 
குடும்பத்தை சேர்ந்தவன். பிளஸ்–2 தேர்வில் 95.75 சதவீத மதிப்பெண் 
பெற்றேன். பிளஸ்–2 மதிப்பெண் மற்றும் நுழைவுத்தேர்வில் பெற்ற
 மதிப்பெண் அடிப்படையில் மும்பையில் உள்ள மருத்துவ 
கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க கடந்த ஆண்டு இடம் 
கிடைத்தது.

பெண்ணாக இருந்து ஆணாக மாறியவருக்கு கல்விச்சான்றிதழில் பெயரை மாற்றி கொடுக்க வேண்டும்.

சென்னை ஐகோர்ட்டில் கவுதம் சுப்ரமணியம் என்பவர் தாக்கல் 
செய்த மனுவில் கூறி இருப்பதாவது:–

நான், பெண்ணாக பிறந்தேன். ரேகா கலியமூர்த்தி என்ற பெயரில் 
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 2012–ம் ஆண்டு கணினி 
அறிவியியலில் பட்டம் பெற்றேன். எனது உடலில் பெண்மைக்கான 
அடையாளம் மாறி, ஆண்களுக்கான ஹார்மோன் வளர்ச்சி 
இருந்ததால் ஆண்களை போன்று செயல்பட்டேன்.

5 வருட சட்ட படிப்புக்கு தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு.

5 வருட சட்டகல்விக்கு 620 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 
2 ஆயிரத்து 934 மாணவ–மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். 
இவர்களில் தகுதியானவர்களுக்கு தரவரிசை பட்டியல் மற்றும் 
அவர்கள் பெற்ற கட்– ஆப் மதிப்பெண் ஆகியவை இன்று
 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு இணையதளத்தில்
 (www.tndalu.ac.in) வெளியிடப்படுகிறது.

இந்த தகவலை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் 
சட்டப்பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) அசோக்குமார் 
தெரிவித்தார்.

புதிய கல்வி கொள்கையை வகுக்க கஸ்தூரிரங்கன் தலைமையில் குழு.

புதிய கல்வி கொள்கையை வகுக்க இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையில் புதிய குழு ஒன்றை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அமைத்து உள்ளது.
மத்தியில் பா.ஜனதா தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும் நாடு முழுவதும் கல்வித்தரத்தை முன்னேற்றும் நோக்கில் புதிய கல்வி கொள்கையை வகுக்க முடிவு செய்தது. இதற்காக முன்னாள் மந்திரிசபை செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையில் குழு ஒன்றையும் அமைத்தது.

ஞாயிறு, 25 ஜூன், 2017

என்னைக் கவர்ந்த வாசகங்கள்...

✳பேசி தீருங்கள்.
பேசியே வளர்க்காதீர்கள்.
✳உரியவர்களிடம் சொல்லுங்கள்.
ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.
✳நடப்பதைப் பாருங்கள்.

நமது சோம்பேறித் தனத்துக்கு காரணம் கற்பித்துக் கொண்டிராமல் தொடர்ச்சியான உழைப்பினைத் தந்து தோல்விகளைத் துரத்துவோம்.

துருக்கி நாட்டுக் கதை ஒன்றிருக்கிறது. . . .

துருக்கியின் அரசன் ஒருநாள் வேட்டைக்கு சென்றிருந்தான். பயண வழியில் ஓர் இரவு வழியில் இருந்த ஒரு நெசவாளியின் வீட்டில் தங்கினான்.

அவர்களுக்கு தன் வீட்டுக்கு வந்து தங்கியிருப்பது அரசன் என்பது தெரியாது. யாரோ ஒரு வேட்டைக்காரன் வந்திருக்கிறான் என நினைத்துக்கொண்டு தங்க வசதி செய்து கொடுத்தார்கள்.

குட்டி கதை.

ஒரு நாள் ஒரு வயதான மனிதர்
பாவ மன்னிப்புக்கோரி சர்ச்சுக்கு வந்தார்...

"பாதர்... நான் பெரிய
பாவம் செய்துவிட்டேன்
மன்னிப்பு கிடைக்குமா?"...

திரு. கண்ணதாசன் அவர்களின் நெஞ்சுக்கு நிம்மதி என்ற புத்தகம் வாசித்திருக்கிறீர்களா..?

தகராறு இல்லாத குடும்பம் இல்லை..
வீட்டுக்கு வீடு வாசப் படி..
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை..
யானைக்கு தன் உடம்பைத் தூக்க முடியவில்லையே என்ற கவலை இருந்தால் அணிலுக்கு தன் உடம்பு இவ்வளவு சிறிதாக இருக்கிறதே என்ற கவலை..

ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!

ஆணின் ஆட்டம்
பதினாறு வரைதான்

பிறந்த போது மட்டுமே கொண்டாடப் பட்டு

வாழ்நாள் முழுவதும் திண்டாட்டத்தை சந்திக்கும் பிறவிதான் ஆண்மகன்.

பத்து வயது வரை பறந்து திரியும் பறவைபோல இருப்பவன்...

👉 உறவு முறைகள் பற்றி 👈

மிகவும் சிந்திக்கவேண்டிய
one of the BEST பதிவு
~~~~~~~

அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, சின்ன அண்ணன், பெரிய அண்ணன், சின்ன அக்கா, பெரிய அக்கா,
சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, மச்சான், மச்சினி, அண்ணி, கொழுந்தனார், நாத்தனார், தாய்மாமன், சித்தப்பா பையன், சித்தப்பா பொண்ணு,

புதிதாக கல்யாணம் ஆன கணவன் மனைவி இடையே ஒரு ஒப்பந்தம்.!

புதிதாக கல்யாணம் ஆன கணவன் மனைவி இடையே ஒரு ஒப்பந்தம்.!இன்று யார் வந்தாலும் கதவை திறக்க கூடாது என்று முடிவெடுத்தனர். அன்றே கணவனுடைய அம்மா, அப்பா வந்தனர் இருவரும் அவர்கள் வருவதை பார்த்தனர்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். கணவனுக்கு கதவை திறக்க வேண்டும் என்ற ஆசை…!

கேட்டது ஒன்று,! கிடைத்தது ஒன்று!!


ஆண்டவனிடம்,
வலிமை கேட்டேன்!
          கஷ்டங்களை
          கொடுத்தார்!!
எதிர் கொண்டேன்,
வலிமை பெற்றேன்.👍
                 
அறிவு கேட்டேன்!

மகாலிங்க மலையைப் பற்றி - நீங்கள் அறியாத சில சுவாரஸ்யமான தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

சதுரகிரியும், திருவண்ணாமலையும், எத்தனை முறை சென்றாலும் , ஒவ்வொரு முறையும் அதன் பிரம்மாண்டத்தை உணர்த்துவதில் தவறியதே இல்லை.

இன்று மகாலிங்க மலையைப் பற்றி - நீங்கள் அறியாத சில சுவாரஸ்யமான தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

நோய் தீர்க்கும் மலை: சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர்.

"PROOF OF DOCUMENT IS VERY VERY IMPORTENT"

 ஒரு பையன் ரயில்ல போயிட்டிருந்தானாம்.அப்போ சூப்பர் பிகர் ஒன்னு அவனுக்கு முன்னாடி இருந்த சீட்ல வந்து ஒக்காந்தாளாம்.அவள பாத்ததும் நம்மாளுக்கு செம குஷியாயிடுச்சாம்.அந்த கேபின்ல அவங்க ரெண்டு பேரை தவிர வேற யாரும் இல்லைன்றதால நம்மாளு அந்த பொண்ண சைட் அடிச்சிட்டே இருந்தானாம்.

அந்த பொண்ணும் மெதுவா அப்பப்போ இவன பாக்க.இளையராஜா பேக் ரவுண்டு வாசிக்க அப்டியே வானத்துல பறக்கற பீலிங்ல இருந்தானாம் நம்ம பையன்.

நகைச்சுவை

ஜக்கு: என்னடா 5 மணிக்கு வரேன்னுட்டு ஆறரை மணிக்கு வர்ற?

மக்கு: ரோடுல ஒத்தன் 500ருபா நோட்டைத் தொலைச்சுட்டு தேடிக்கிட்டு இருந்தான்!

ஜக்கு: பரவாயில்லையே! தேடி எடுத்துக் கொடுத்தியா?

ஆரோக்கியமாகவும், நோயில்லாமலும் உடலை பாதுகாக்க பழரசங்கள், மூலிகைச்சாறு குடித்தல் நலம் பயக்கும்.

ஆரோக்கியமாகவும், நோயில்லாமலும் உடலை பாதுகாக்க பழரசங்கள், மூலிகைச்சாறு குடித்தல் நலம் பயக்கும். இதனால் உடல் வெப்பம் தணிவதோடு, மூலிகைகள், பழங்களில் உள்ள சத்துக்களால் உடல் நன்கு வலுப்பெறும். ஒவ்வொரு நாளும் நாம் அருந்த வேண்டிய உயிர் சத்துகள் நிறைந்த மூலிகைச்சாறு என்னவென்று பார்க்கலாம்.

🍁திங்கள் – அருகம்புல்☘

#நமக்குவேண்டியதும்வேண்டாததும்!

மனவளக் கட்டுரை!

1. கன மழைக்கு அஞ்சாதீர்கள், மிதமான மழைக்கு ஏங்காதீர்கள்.
அதைவிட நல்ல குடைக்காக மட்டும் வேண்டுங்கள், அதுதான் நல்லது.

2. வெள்ளம் வரும்போது மீன்கள் எறும்புகளை உட்கொள்ளும்,
வெள்ளம் வடிந்த பிறகு எறும்புகள் மீன்களைத் திண்ணும்.
கால நேரம்தான் அனைத்திற்கும் காரணம்.  கடவுள் எல்லோருக்கும், எல்லாவற்றிற்கும் ஒரு வாய்ப்பைக் கொடுப்பார்.

அனுபவமே குரு.

ஒரு வயதான மேஸ்திரி, வேலையிலிருந்து ஓய்வு பெற விரும்பினார்.

இனியாவது குடும்பத்தோடு நேரம் செலவழிக்கவேண்டும் என்பது அவர் திட்டம்!

முதலாளியான கான்ட்ராக்டரிடம் இந்த முடிவை அவர் சொல்ல.. தனது நீண்ட கால ஊழியர் ஓய்வு பெறுவதில் கான்ட்ராக்டருக்கு லேசான வருத்தம்!

போலியோ எனும் இளம்பிள்ளைவாதம் மற்றும் எலும்பு முறிவு உள்ளிட்ட எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை முற்றிலும் இலவசம்.


           திருமலா திருப்பதி தேவஸ்தானம் (TTD) சார்பில் BIRRD [Hospital - Balaji Institute of Surgery, Research and Rehabilitation for the Disabled], Tirupathi மருத்துவமனை கீழ் திருப்பதியில் இயங்கி வருகின்றது. இங்கு எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்திற்கும் சிகிச்சை அளிக்கப்படுகின்றது. உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை முற்றிலும் இலவசம். (ISO தரச்சான்றிதழ் பெற்ற திருமலா திருப்பதி தேவஸ்தான (TTD) சேவைகள் பற்றி அறியாதவர் இல்லை)

274 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்பு.

காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது.

274 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளோம்.

எண் - கோயில் - இருப்பிடம் - போன்
சென்னை மாவட்டம்
01. திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் - பாடி - 044 - 2654 0706.
02. மாசிலாமணீஸ்வரர் - வடதிருமுல்லைவாயில். சென்னையிலிருந்து 26 கி.மீ., - 044 - 2637 6151.
03. கபாலீஸ்வரர் - மயிலாப்பூர் - 044 - 2464 1670.

#அனுமனின்வால்வழிபாடு…………


#அனுமன்வாலில்குங்குமம்_வைத்து

 #வழிபடுவதுஏன்தெரியுமா?*

#அனுமனின்வால்வழிபாடு…………

 சிவனின் அம்சமாக தோன்றியவர் அனுமன். இவர் ராமனுக்கு ஒரு தூதராக விளங்கியவர். அனுமன் கோவிலுக்கு சென்று அனுமனைத் தரிசிக்கும் போது, அனுமனின் வாலில் குங்குமம் வைத்து வணங்க வேண்டுமென்பார்கள்.

முதுகுத் தண்டு என்பது உடலின் வேர். வேரை நலமாக வைத்திருந்தால், உடல் என்னும் மரம் மிகச்சிறப்பாக இருக்கும். முதுகெலும்பும், முதுகும் நலமாக இருக்க 10 யோசனைகள்: ********************


 1. தினம் இருபத்தோரு முறையாவது குனிந்து காலைத்தொட்டு நிமிருங்கள். (தோப்புக்கரணம் போடுவதும் மிகச் சிறந்தது)

2.தினம் இருபத்தோரு நிமிடங்கள் வேகமாக நடங்கள்.

3. அமரும்போது வளையாதீர்கள்.

🌴அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வோம்❗

🌹 வாழ்வின் எதார்த்தம் 🌹

🌴நாம் இறந்த அடுத்த நொடியே நம்முடைய உயிர் ஆத்மாவாக மாறி
வெளியே நின்றபடி நம்மை வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிடும்.

🌴கொஞ்ச நேரத்தில் எப்படியாவது நாம் இறந்த செய்தி நம் வீட்டுக்கு போய்விடும்,
எல்லோரும் கதறியழுது காத்திருப்பார்கள்,

வாழைப்பழத் தோலின் பலன்கள்.

வாழைப்பழம் எல்லாருக்கும் விருப்பமான பழம்தான். ஆனால் வாழைப்பழத் தோலின் பலன்களை நீங்கள் தெரிந்து கொண்டால், அதனை வீசி எறிய யோசிப்பீர்கள். முள்ளை எடுக்க வேண்டுமா? எளிய வழி: முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டுமென்பதில்லை.

மற்றவர்கள் பேசுவதை நினைத்துக்கொண்டு இருந்தால் நாம் நிம்மதியாக வாழ முடியாது.

குறையா? நிறையா?
 ஒரு கிராமத்தில் ஒரு ஏழை வாழ்ந்து வந்தான். அவன் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவான். தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, பானையில் பாதியளவு நீரே இருக்கும். குறையில்லாத பானை குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்துகொண்டே இருக்கும். இப்படியே இரண்டு வருடங்கள் ஆனது. கேலியைப் பொறுக்கமுடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்து ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். என் குறையை நீங்கள் சரிசெய்யுங்களேன் என்றது.

நகைச்சுவை

ஏன் டா தம்பீ ...

ஆண்களுக்கு தலைமுடி கொஞ்சமா வளருதே  பெண்களுக்கு மட்டும் ஏன்
தலைமுடி அதிகமா வளருது ....

செடி யா இருந்தாலும்
முடி யா இருந்தாலும்
களிமண் எங்கே அதிகமாக இருக்கோ
அங்கே தான் வளரும் ன்னு சொன்னா
துப்பிட்டு போறாங்க !!!!😜😜😜

ஆலய அதிசயங்கள்!! 22

1. திருவண்ணாமலை சுவாமி எப்போதுமே ராஜகோபுரம் வழியாக வராமல் பக்கத்து வாசல் வழியாகத்தான் வெளியே வருவார்.

2. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மொத்தம் 14 கோபுரங்கள் உள்ளன. வேறு எந்த கோவிலிலும் இவ்வளவு அதிகமான கோபுரங்கள் இல்லை.

3. கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் தயாராகும் எந்த நைவேத்தியப் பண்டங்களுக்கும் உப்பு சேர்ப்பதில்லை.

நல்லதையே தனியாக செய்பவன் தண்டிக்கப்படுகிறான்...

இரண்டு ரயில் தண்டவாளங்கள் அருகருகே இருக்கின்றன..

ஒன்றில் எப்பவுமே ரயில் வராது....


மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்...

ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை
விளையாடிக் கொண்டிருக்கிறது.

வாழ்க்கை வளம் பெற இத்தகைய செயல்களை கடைபிடியுங்கள்....⁠⁠⁠⁠

நான்கு நபர்களை புறக்கணி

🤗மடையன்
🤗சுயநலக்காரன்
🤗முட்டாள்
🤗ஓய்வாக இருப்பவன்

நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே

ஒருவருக்கொருவர் மற்றவர்களை தரக்குறைவாக எண்ணாமல் பரஸ்பரம் மரியாதை செலுத்திக்கொள்வது எப்போதுமே நன்மை பயக்கும்.

இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒருவர், ஒரு நாள் மாலை வேலை முடியும் தருவாயில் இறைச்சி பதப்படுத்தும் coldroom அறைக்குள் எதோ வேலையாக இருந்த போது எதிர்பாராதவிதமாய் அதன் தானியங்கி கதவு பூட்டிக்கொண்டுவிட்டது.

உடனே பெரும் கூச்சலிட்டாலும் அவர் எழுப்பிய ஓசை வெளியே யாருக்கும் கேட்கவில்லை மேலும் பெரும்பாலானோர் வேலை முடிந்து கிளம்பிவிட்டனர்...

சுயநலம் உள்ள மனிதன் புறக்கணிக்கப் படுவான். பொதுநலம் உள்ளவன் போற்றப் படுவான்.

யார் ஏழை  ❓❓❓

🔰ஒரு பணக்கார அம்மா துணி கடைக்குப் போய்_கடைக்காரரிடம் எனது மகனுக்கு திருமணம்' ஆகவே எனது வீட்டில் வேலைசெய்யும் பணிப்பெண்ணிற்கு கொடுக்க மிக குறைந்த விலையில் ஒரு சேலை கொடுங்கள் என்று வாங்கிச் செல்கிறார்..❗

🔰சற்று நேரத்திற்கு பிறகு

வாழும் வரை வாழ்க்கை வாழ்ந்து காட்டுவோம்

சலங்கையின் விலை  ஆயிரக்கணக்கில்.

அதை காலில் தான் அனிய  முடியும்.
குங்குமத்தின் விலை மிகக்குறைவு. அதை நெற்றியில் அலங்கரித்து கொள்வார்கள். இங்கு விலை முக்கியமில்லை. அதி ன் பெருமை தான் முக்கியம்.

நகைச்சுவை

 "உள்ளே ஒரு ஜோடி சேர்ந்துவிட்டது.. வெளியே ஒரு ஜோடி தொலைந்துவிட்டது".. - கல்யாண வீட்டில் செருப்பை தொலைத்தவன் எழுதிய கவிதை..!!                      

**********

நிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியைத் தேடுவதும், மனைவி

Happy ooo happy 😊

Daily 1 Apple,
     No Doctor

🔴Daily 5 Badam,
    No Cancer

🔴 Daily 1 Lemon,
     No Fat

🔴 Daily 1 glass Milk,
     No Bone Problm

🔴Daily 12 glass Pani,
     No skin problm

🔴Daily 4 dates,
     No weakness.

🔴 Daily 3 times pray,
     No Tensions

🔴Daily  8 hrs sleep

Don't 'copy' if you cannot 'paste' correctly!

மிக சுவையாக பேசக்கூடிய ஒரு பேச்சாளர் ஒருமுறை உரையாற்றும்போது....
"என் வாழ்வின் சிறந்த நாட்கள்...
இன்னொருவரின் மனைவியோடு செலவழித்த நாட்களே"
பார்வையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துப்போனார்கள்
பேச்சாளர் தொடர்ந்து சொன்னது:

NEET - MBBS மருத்துவ படிப்பிற்கான அட்மிஷன் எப்படி?

சி.பி.எஸ்.இ.,யின், 'நீட்' தேர்வு பொறுப்பு இணை செயலர், சன்யம் பரத்வாஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

* 'நீட்' தேர்ச்சிக்கான தகுதி மதிப்பெண்கள், இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் இந்திய பல் மருத்துவ கவுன்சில் விதிகளின்படி, நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. தகுதி பெற்றவர்கள், சம்பந்தப்பட்ட கவுன்சிலிங் கமிட்டியை தொடர்பு கொண்டு, மாணவர் சேர்க்கை நடவடிக்கையை துவங்க வேண்டும்.

"PF" CALCULATION METHOD.

உங்க PF பணம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் சட்டம்-1952 (அ) தொழிலாளர் சேமநல நிதி 1952 என்பது இந்தியாவில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஓய்வுக்காலத்தில் பயனளிக்கும் விதமாக தொடங்கப்பட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும்.

ஆபாசங்களுக்கு தடை... குழந்தைகளுக்கான பிரத்யேக தேடுதளம் “கிடில்”..! #Kiddle.

குழந்தைகள் வளர்ப்பில் மிக முக்கியமானது குழந்தைகளுக்கு எதைக் கொடுப்பது எதைக் கொடுக்க கூடாது என்பதுதான். மூன்று வயதுள்ள குழந்தைகள் தொடங்கி  பத்து வயதுள்ள குழந்தைகள் வரை மொபைல் மற்றும் இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை இந்தியாவில் மிகவும் அதிகம். 

படிக்கும்போது எனக்கு கல்விக் கடன் மறுக்கப்பட்டது; ஆட்சியரானதும் ரூ.110 கோடி வழங்கினேன்- பள்ளிக்கல்வித்துறை செயலர் திரு.உதயசந்திரன் அவர்கள் உருக்கம்.

நான் படிக்கும்போது பல்வேறு காரணங்களால் எனக்கு கல்விக் கடன் மறுக்கப்பட்டது. அதன் பிறகு, ஈரோடு ஆட்சியராக பொறுப்பேற்றபோது, ஒரே ஆண்டில் ரூ.110 கோடி கல்விக் கடன் வழங்க நடவடிக்கை எடுத் தேன் என பள்ளிக் கல்வித்துறை செயலாளர் டி.உதயசந்திரன் தெரிவித்தார்.

அங்கன்வாடிகளில் காலியாக உள்ள 30 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர்சரோஜா அறிவிப்பு.

அங்கன்வாடிகளில் காலியாக உள்ள 30 ஆயிரம்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் வி.சரோஜா தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் சமூக நலம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறைமானிய கோரிக்கைமீது நடந்த விவாதத்தில் தூத்துக்குடி தொகுதி திமுக எம்எல்ஏ கீதாஜீவன் பேசுகையில்,
''மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் 3 சக்கர ஸ்கூட்டர் மோசமான நிலையில் இருந்தால் திமுக ஆட்சியின் போது புதியவாகனம் வழங்கப்பட்டது. தற்போது புதியவானகங்கள் இருப்பு இல்லை.அதே நேரம் பழுதுபார்த்தும் தரப்படுவதில்லை. 

நீட்.. தெளிவாக்கியது தமிழக அரசு... 85% மருத்துவ இடங்கள் தமிழக மாணவர்களுக்கே!

நீட் தேர்வு முடிவு அடிப்படையில் நடைபெறும் மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் 85 சதவிகித இடங்களை மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அரசாணையை இன்று தமிழக சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி செய்துள்ளார். 

தமிழகத்தில் ரூ.477½ கோடியில் பள்ளி, கல்லூரி கட்டிடங்கள்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தலைமை 
செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் சென்னை, ஆர்.கே.நகர் 
தொகுதிக்கு உட்பட்ட, தண்டையார்பேட்டையில் 8 கோடியே 48 லட்சம் 
ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல்
(இருபாலர்) கல்லூரிக்கான நிர்வாகம் மற்றும் கல்வியியல் கட்டிடங்களை 
காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

2017-18 School working days, Holidays, working Saturdays and CRC days.

சென்னையை சேர்ந்த முருகவேல் உள்பட 9 மாணவர்கள் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:–
2015–2016–ம் கல்வி ஆண்டில் பிளஸ்–2 முடித்து வெளியேறிய மாணவர்களுக்கு மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வான நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அந்த சமயத்தில் நாங்கள் பிளஸ்–1 படித்துவிட்டு, பிளஸ்–2 வகுப்பில் சேர்ந்தோம்.

சனி, 24 ஜூன், 2017

NEET : மாநில அளவில் கோவை மாணவர் முதலிடம்.



நீட் தேர்வில் தமிழக அளவில் கோவை மாணவர் ஜி.எம்.முகேஷ் கண்ணா முதலிடம் பெற்றுள்ளார்.
இவர் நீட் தேர்வில் 720-க்கு 655 மதிப்பெண் பெற்றுள்ளார். அகில இந்திய அளவில் 260-ஆவது இடம் பெற்றுள்ளார்.

நீட் தேர்வில் 6.11 லட்சம் மாணவர்கள் 'பாஸ்' 81 ஆயிரம் மருத்துவ இடங்களுக்கு கடும் போட்டி



நாடு முழுவதும், 778 கல்லுாரிகளில், 81 ஆயிரம் மருத்துவ படிப்பு இடங்களுக்கான,
'நீட்' நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட உள்ளன. தேர்வு எழுதியதில், 56 சதவீதம் பேரான, 6.11 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ள னர். 'டாப்பர்ஸ்' பட்டியலில், தமிழகத்தை தவிர, பிற தென் மாநில மாணவர்களே இடம் பிடித்துள்ளனர். 

'அட்மிஷன்' எப்படி: சி.பி.எஸ்.இ., விளக்கம்.



நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, எப்படி மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. சி.பி.எஸ்.இ.,யின், 'நீட்' தேர்வு பொறுப்பு இணை செயலர், சன்யம்
பரத்வாஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

கலந்தாய்வின்போது மாணவர்களிடம் ஒப்புதல் பெறுவதும் அவசியம்: யுஜிசி உத்தரவு.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், எம்.பி.பி.எஸ். கலந்தாய்வின்போது நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கட்டண விவரங்களை வெளியிடுவதுடன், அதைச் செலுத்துவதற்கான ஒப்புதலையும் மாணவர்களிடம் பெறுவது அவசியம் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது. நீண்ட இழுபறிக்குப் பின்னர் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான "நீட்' தகுதித் தேர்வு முடிவை, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வெள்ளிக்கிழமை

GST - ஜி.எஸ்.டி. என்றால் என்ன..?

ஜி.எஸ்.டி. என்றால் என்ன..?
GST... ஜுலை 1ஆம் தேதி முதல் அமுலுக்கு வர இருப்பதால், அதன் தொடர்பான சில விவரங்கள்..!

1. Second sales என்பது இல்லை. ஒவ்வொரூ விற்பனையிலும் வரி உண்டு.
2. Online மூலம் மட்டுமே ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும்.

ஐந்தாம் வகுப்பு முதல் பருவ தமிழ் ஆங்கிலம் மன வரைப்படம்.

தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வு ஜூலை 3ஆம் வாரம் தொடக்கம்.

மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில்
தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வு வரும் ஜூலை 3ஆம் வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

அகில இந்திய மருத்துவக் கலந்தாய்வு முடிந்த பின்னரே தமிழகத்தில் மாநில மருத்துவக் கலந்தாய்வு தொடங்கப்படும், ஒரு வாரத்தில் இதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

30 ஸ்மார்ட் நகரங்கள் அறிவிப்பு: நெல்லை, தூத்துக்குடி, திருச்சி, திருப்பூர் நகரங்கள் தேர்வு.



மத்திய அரசின் ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தின் கீழ் புதிதாக 30 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

புதிய ஸ்மார்ட் நகரங்கள் பட்டியலை இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 23) மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு வெளியிட்டார்.

அரசு ஒப்பந்த டாக்டர்களுக்கு ஆதார் இனி கட்டாயம்!!!

அரசு ஒப்பந்த டாக்டர்கள், இனி ஆதார் எண்ணை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்' என, மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இயக்குனர், பானு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில், 13 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், முதுநிலை மருத்துவ படிப்புகள் உள்ளன. இதில், முதுநிலை மருத்துவம் படிப்போர், இரண்டு ஆண்டுகள், கிராமப்புற அரசு  மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும். ஆனால், படிப்பை முடிக்கும் அரசு சாரா டாக்டர்கள், கிராமப்புற அரசு மருத்துவமனைகளில், ஓரிரு மாதங்கள் பணியாற்றி விட்டு, அரசுக்கு, 'டிமிக்கி' கொடுத்து வருகின்றனர். மேலும், பணியில் சேரும்போது, போலியான முகவரியை கொடுப்பதால், அவர்களை தொடர்பு கொள்ள முடிவதில்லை.

DTEd Exam - இன்று ஹால் டிக்கெட் !!

டிப்ளமா' ஆசிரியர் பயிற்சி தேர்வுக்கு, இன்றுமுதல், ஜூலை, 5 வரை, 'ஹால் டிக்கெட்' பதிவிறக்கம் செய்யலாம்.தொடக்கக் கல்வி டிப்ளமா ஆசிரியர் பயிற்சி படிப்பில், இரண்டாம் ஆண்டுக்கு, ஜூன், 28 முதல், ஜூலை, 12 வரையும், முதல் ஆண்டுக்கு, ஜூன், 29 முதல், ஜூலை, 14 வரையிலும் தேர்வு நடக்கிறது.

இதற்கு விண்ணப்பித்த, தனித்தேர்வர்கள் மற்றும் தத்கல் திட்டத்தில் விண்ணப்பித்தவர்கள், தேர்வுத் துறையின், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், இன்று முதல்ஜூலை, 5 வரை, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என, அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு தரவரிசைப்பட்டியல் ஜூன் 30-ம் தேதி வெளியீடு !!

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு ஜூன் 30-ம் தேதி தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக துணைவேந்தர் திலகர் பேட்டி அளித்துள்ளார். கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு ஜூலை 19, 20, 27-ம் தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும் என அவர் தெரிவித்தார்.

TNOU - பி.எட் கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ளும் தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு TNOU பல்கலைக்கழகம் வழங்கிய தெளிவுரை.


இனி வரும் காலங்களில் SSA மூலம் அளிக்கப்படும் பயிற்சிகள் எப்படி இருக்கும் ?? யார் கண்காணிப்பில் இருக்கும் ??



இனி வரும் காலங்களில் SSA Upper Primary Block level பயிற்சிகள் RMSA உடன் இணைந்தே நடைபெறும் .

SSLC மறுகூட்டல் முடிவு வெளியீடு.

எஸ்.எஸ்.எல்.சி., பொது தேர்வில் மறுகூட்டல் விண்ணப்பித்தவர்களுக்கு முடிவுகள் (ஜூன் 23ம் தேதி) வெளியிடப்படுகிறது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாலை 6 மணிக்கு வெளியிடப்படுகிறது. மறு கூட்டலில் மாற்றம் இல்லையெனில் இணையதளத்தில் முடிவுகள் வெளியாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை தமிழ்நாடு அரசு தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.

ஓய்வூதியம் என்பதின் வரையறைகள்.

ஓய்வூதியம் என்றால் என்ன?
 
 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அரசாங்கத்திற்காக தங்களுடையஇளமை காலம் முழுவதும் உடல் பலமாக இருக்கும் போது அரசுக்கும் மக்களுக்கும் இடையே அச்சாணியாக சுழன்று  அரசுக்கும் மக்களுக்கும் தங்களுடைய பணிக்காலம் முழுவதும் முழு உழைப்பை செலுத்துகின்றனர்.

தமிழ் நூல்கள்.

முதலெழுத்தைக் கொண்டு நூல்களைத் தேட:
 |  |  |  |  |  |  |  |  |  |
 |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  | A | # |

"நூல்கள்" பகுப்பிலுள்ள பக்கங்கள்