புதன், 26 ஜூலை, 2017

இனி பட்டப்படிப்பு சான்றிதழிலும் ஆதார் எண்: UGC அறிவுறுத்தல்.

இந்திய மக்கள் ஒவ்வொருவரின் அடையாளமாகஆதார் அட்டை மாறிவிட்டது.
ஆதார் அட்டை இல்லாமல் ஒரு அணுவை கூட அகற்ற முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
ரயில் டிக்கெட், வங்கி கணக்கு, ரேசன் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட பல விஷயங்களுக்கு ஆதார் அட்டை அவசியம் என்ற நிலையை மத்திய மாநில அரசுகள் கொண்டு வந்துவிட்டன.


இந்த நிலையில் பட்டப்படிப்பு சான்றிதழில் போலிகள் அதிகம் நடமாடுவதைதவிர்க்க, இனிமேல் விநியோகிக்கப்படும்பட்டப்படிப்பு சான்றிதழில் மாணவரின் ஆதார் அட்டை எண் மற்றும் புகைப்படம் இடம்பெற வேண்டும் என்று யூசிஜி என்ற பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் மகேந்திரநாத் பாண்டே கூறியபோது, 'பட்டப்படிப்புகளில் படிப்பதற்காக மாணவர்கள் சேரும் கல்லூரிகள் பெயர்களையும், படிப்பு முறை (முழுநேரம், பகுதி நேரம் அல்லது தொலைநிலைக் கல்வி) போன்ற விவரங்களையும் சான்றிதழ்களில் சேர்க்கவும் அதில் மாணவர்களின் புகைப்படங்கள் மற்றும் ஆதார் எண் இடம்பெற வேண்டும் எனவும் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி அறிவுறுத்தி உள்ளது.

 இதுகுறித்து இந்தியாவின் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் கடந்த மார்ச் 21ல் சுற்றறிக்கை ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக