சனி, 9 டிசம்பர், 2017

ஸ்மார்ட் கார்டு இல்லையென்றாலும் ரேஷன் பொருட்கள் கிடைக்கும்.

ஜனவரி 1 முதல் ஸ்மார்ட் கார்ட் இல்லாதவர்களுக்கும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படும் என உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை விளக்கமளித்துள்ளது.

ஜனவரி 1ஆம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு இல்லாதவர்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கக் கூடாது என்று பொது விநியோகத் துறை உத்தரவிட்டது.

ஓகி புயல் தாக்குதல் காரணமாக குமரியில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு.

கன்னியாகுமரி மக்கள் அபராதம் இன்றி மின் கட்டணம் செலுத்த ஜனவரி 31-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 30 முதல் டிசம்பர் 16க்குள் செலுத்த வேண்டிய மின் கட்டணம், நுகர்வோர் நலன் கருதி ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மின் வாரியம் அறிவித்துள்ளது. ஏற்கனவே டிசம்பர் 18-ம் தேதி வரை வழங்கப்பட்டிருந்த அவகாசத்தை மேலும் நீடித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

105 MBBS மாணவர்கள் நீக்கம்-இந்திய மருத்துவ கவுன்சில் அதிரடி!!!

வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப்பணி காலம் நீட்டிப்பு!!!


வெள்ளி, 8 டிசம்பர், 2017

ஓய்வு அறையில் ஆசிரியர்கள் தூங்குவது குற்றமாகாது - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு - 21.11.2008.


கற்றல் குறியீடு மாணவர்கள் பெற்றிருக்க வேண்டிய திறன்கள்-- (1,2,3 வகுப்புகள்)

Income tax கட்டும் மாதாந்திர சம்பளம் பெறுவோர் கவனிக்க.



👉நாம் மாதம் பெறும் மொத்த சம்பளத்தொகைக்கு அனுமதிக்கப்பட்ட கழிவுகள் போக பிப்ரவரி மாதம் income tax கணக்கிட்டு tax தொகையை சம்பளத்தில் பிடிக்கும் வகையில் ஓர் இன்கம் டாக்ஸ் கணக்கிட்டு படிவம் தருகிறோம்.அவர்களும் அத்தொகையை ஊதியத்தில் பிடித்தபின் மீதி ஊதியம் வழங்குகின்றனர்.இம்முறை சரியா? தவறா? என படித்த நாமே அறிவதில்லை. 

👉இன்கம் டாக்ஸ் விதிகள் கூறுவதென்ன 

இரண்டே நாட்களில் பான் கார்டு பெறுவது எப்படி???

பான் கார்டு வைத்திருப்பது நல்லது.

நிரந்தர கணக்கு எண் அல்லது பான் கார்டு என்பது வரிசெலுத்துவோருக்கு வருமான வரி துறையினர் அளிக்கும் 10இலக்க எண்ணெழுத்தாகும். பான் கார்டினை அடையாளஅட்டையாகவும் பயன்படுத்தலாம்.

EMIS FLASH NEWS.

தற்போது  எமிஸ் வலைதளம் செயல்படவில்லையா கவலை வேண்டாம்.
காரணம்  மாணவனது போட்டோவை அப்லோடு செய்யும் வகையில் சர்வர் தயார்செய்யம்  பணி நடைபெறுகின்றது. போட்டோக்களை ஸ்மார்ட்போன் மூலம் அப்படியே மாணவனைபடம் பிடித்து ஏற்றும் வகையில்   ஸ்மார்ட் போன் ஆன்ராய்டு App தயார் செய்யப்பட்டு வருகின்றது எனவே எமிஸ் வலைதளம் திங்கள் முதல் ,வலைதளம் மற்றும், Cellphone அப்ளிகேஷன்  என இரு வழியிலும் செயல் பட உள்ளது.பதட்டமில்லாமல் திஙகள்  முதல் போட்டோக்களையும் ,மற்ற பதிவுகளையும்  பதிவேற்றலாம்.

தொடக்க நடுநிலைப்பள்ளிகளின் கற்றல் கற்பித்தல் பணி நாட்களின் எண்ணிக்கையை மாற்றியமைத்தல் ஆணை!!!

தமிழாசிரியர் ஊக்க ஊதிய உயர்வு குறித்த CM CELL Reply.


தாழ்த்தபட்டோரை திருமணம் செய்தால் ரூ.2.5 லட்சம் உதவி தொகை; அரசு அறிவிப்பு.

தலித்தை திருமணம் செய்தால் ரூ. 2.5 லட்சம் உதவி தொகை வழங்கும் திட்டத்தில் மத்திய அரசு பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

உதவி தொகை:
கலப்பு திருமணத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு தலித்தை திருமணம் செய்தால் ரூ.2.5 லட்சம் உதவி தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. திருமணம் செய்யும் தம்பதிகளில் ஒருவர் தலித் பிரிவை சார்ந்தவராகவும், மற்றவர் தலித் அல்லாத பிரிவை சார்ந்தவராகவும் இருக்கும் பட்சத்தில் அவர்கள் இந்த உதவி தொகையை பெற தகுதியுடையவராவர்.

ஏடிஸ் கொசுப்புழு இல்லை என வியாழன் தோறும் collector க்கு அனுப்ப வேண்டிய வாரந்திர சான்று.


8 மணி நேரத்துக்கு மேல் வாடகைக் கார் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து: தமிழக அரசு உத்தரவு.



ஒரு நாளில் 8 மணி நேரத்துக்கு மேல் வாடகைக் கார் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் மோட்டார் வாகனச் சட்டத்தைக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஆதார் இணைப்பு : பான் கார்டு, மொபைலுக்கான காலக்கெடுவில் மாற்றமில்லை.

ஆதார் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: வங்கிக் கணக்கு, பான் கார்டு மற்றும் மொபைல் எண்களுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான உத்தரவுக்கு, நீதிமன்றம் எந்தத் தடையும் விதிக்கவில்லை. அந்த உத்தரவு சட்டப்பூர்வமானது; நடைமுறையில் உள்ளது. அதன்படி, வங்கிக் கணக்கு மற்றும் பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு, டிச., 31ல் முடிகிறது. மொபைல் எண்ணுடன், ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு, 2018, பிப்., 6ம் தேதியோடு முடிகிறது. இந்தக் காலக்கெடுவில் எந்த மாற்றமும் இல்லை

தமிழகத்தில் உள்ள 27 மாவட்ட ரேஷன் கடையில் 10th 12th படித்தவர்களுக்கு அரசு 2767 காலி பணி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றது.

தமிழகத்தில் உள்ள 27 மாவட்ட ரேஷன் கடையில் 10th 12th படித்தவர்களுக்கு அரசு 2767 காலி பணி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றது. இறுதிநாள் 15.12.2017 
ஊதியம் Rs.12000/-


TN Ration Shop Jobs 2018 – 2767 Vacancies

TNPSC: அறநிலையத்துறை தேர்வு அறிவிப்பு.

அறநிலையத்துறை உதவி கமிஷனர் பதவிக்கு, முதன்மை தேர்வு தேதியை, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.அறநிலையத்துறை உதவி கமிஷனர் பணியில், 3 காலியிடங்களுக்கு, முதன்மை எழுத்து தேர்வு, மார்ச், 10, 11ல் நடக்கிறது. தமிழ்நாடு சீர்திருத்தப் பள்ளி கண்காணிப்பு மற்றும் உளவியலாளர் பதவிக்கு, 8 இடங்களுக்கு, வரும், 19ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.

வியாழன், 7 டிசம்பர், 2017

வருவாய் வழி தேர்வு 'ஹால் டிக்கெட்' வெளியீடு.

தேசிய வருவாய் வழி தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்'களை, நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம். எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு, 16ல் நடக்க உள்ளது.இதற்கு விண்ணப்பித்த மாணவர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழியே, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தங்களின், 'ஹால் டிக்கெட்'களை பதிவிறக்கம் செய்யலாம்.