தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்குவது தொடர்பாக முடிவு எடுப்பதில் தமிழக அரசு மவுனம் காத்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நவம்பர் 25ம் தேதி கடைசி நாள் ஆகும்.
குமரி மாவட்டத்தை சேர்ந்த குமரி மகாசபா செயலாளர் ஜெயக்குமார் தாமஸ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் ‘கிராமப்புற மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி வழங்குவதற்காக மத்திய அரசால் 1986ல் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் தொடங்கப்பட்டன.
