திங்கள், 24 ஏப்ரல், 2017

தன்னைப் பெற்றெடுத்த அன்னைக்கு 30 ரூபாய் கூடுதலாகத் தரமறுத்த முதல்வரும், 30 ரூபாய்க்காகத் தயங்கித், தயங்கித் தன் மகனுக்கே தூது விட்டத் தாயும்...

மகன் தன் தாய்க்கு மாதந்தோறும் ரூ.120 அனுப்பினார். மகன் அனுப்பும் பணம் போதுமானதாக இல்லை. எனவே தாய், தயங்கித் தயங்கி, தன் சொந்த மகனுக்கே, தூது விட்டார்.

மகனே, நீ முதல் அமைச்சரானதும், என்னைப் பார்க்க, ஒவ்வொரு நாளும், யார் யாரோ வருகின்றனர். வீடு தேடி வருபவர்களுக்கு சோடாவோ, கலரோ வழங்காமல் அனுப்ப முடியவில்லை. அதனால் செலவு கொஞ்சம் கூடுகிறது. எனவே இனிமேல் மாதம் ரூ.150 அனுப்பினால் நல்லது.

அம்மா, உன்னைத் தேடி வருபவர்களுக்கு, நீ சக்திக்கு மீறிச் செலவழிக்க வேண்டிய அவசியம் இல்லை. சோடா, கலர் தருவதை இனிமேல் நிறுத்து. நான் அனுப்பும் 120 ரூபாயில் வாழ்க்கையை சிக்கனமாக நடத்து.

நண்பர்களே, இவர்தான் நம் கர்மவீரர் காமராசர்.

தன்னைப் பெற்றெடுத்த அன்னைக்கு 30 ரூபாய் கூடுதலாகத் தரமறுத்த முதல்வரும், 30 ரூபாய்க்காகத் தயங்கித், தயங்கித் தன் மகனுக்கே தூது விட்டத் தாயும், இம் மண்ணில் நரம்பும், இரத்தமும், சதையுமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை எண்ணும்போதே நெஞ்சம் சிலிர்க்கிறதல்லவா....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக