சனி, 22 ஏப்ரல், 2017

Flight Ticket Discount to Senior Citizen.

மூத்த குடிமக்களுக்கு 50% கட்டண சலுகை.. வயது வரம்பு 60 ஆக குறைப்பு.. ஏர் இந்தியா நிறுவனம் அதிரடி அறிவிப்பு.

✈ சீனியர் சிட்டிசன்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
✈  மேலும் கட்டண சலுகையை பெறுவதற்கான வயது வரம்பையும் ஏர் இந்தியா குறைத்துள்ளது.
✈ ஏர் இந்தியா விமானங்கள் ஏற்கனவே 63 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை வழங்கி வந்தது.
✈  இந்நிலையில் மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பை 60ஆக குறைத்துள்ளது ஏர் இந்தியா நிறுவனம்.

✈ மேலும் ஏர் இந்தியா விமானங்களில் பயணம் செய்வதற்கான கட்டணத்தையும் மூத்த குடிமக்களுக்கு 50 சதவீதமாக குறைத்துள்ளது.

✈  60 -வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மட்டுமே இந்த 50 சதவீத கட்டண சலுகையை பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

✈ ஏர் இந்தியா நிறுவனத்தின் இந்த அறிவிப்பு மூத்த குடிமக்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது.

✈ இந்த அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக