புதன், 19 ஏப்ரல், 2017

பெட்ரோல் பங்க் : மே, 14 முதல் ஞாயிறு விடுமுறை.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பெட்ரோல் பங்க்குகள், மே, 14 முதல், ஞாயிற்று கிழமைகளில் செயல்படாது' என, தமிழக பெட்ரோலியம் டீலர்ஸ் கூட்டமைப்பின் தலைவர், கே.பி.முரளி கூறினார். 

அவர் கூறியதாவது: தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 4,850 பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. இவற்றில் தினமும் சராசரியாக, 153 கோடி ரூபாய் மதிப்பிலான, 5,000 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையாகிறது. பிரதமர் நரேந்திர மோடி, 'பெட்ரோல், டீசல் சிக்கனத்தில், மக்கள் தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும்; வாரத்தில் ஒரு நாள், அவற்றை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது' என்றார். அதை ஏற்று, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மே, 14 முதல், ஞாயிற்று கிழமைகளில் பெட்ரோல் பங்க்குகள் இயங்காது. எங்கள் முடிவுக்கு, வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக