சனி, 29 ஏப்ரல், 2017

டெட் தேர்வு எழுதப்போறீங்களா? இதை படிச்சிட்டு போங்க !!!

டெட் எனப்படும் ஆசிரியர் பணிக்கான தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வில் 7.4 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். தேர்வின் போது ஏற்படும் முறைகேடுகளைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. காலை 10 மணி முதல் 1 மணி வரை நடக்கும் டெட் தேர்வுக்கு தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் காலை 8.30 மணிக்கே வந்துவிட வேண்டும். மேலும் காலை 9.00 மணிக்கு மேல் வருவோர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். 
தேர்வு எழுதும் பார்வையற்றவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் சலுகை வழங்கப்படும். தேர்வு எழுத உதவிக்கு ஒருவரை அழைத்து வரலாம். மொபைல் போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் தேர்வு அறைக்கு எடுத்து வர அனுமதியில்லை. தேர்வில் காப்பியடிப்பதை தடுக்க 3,000 போர் இடம் பெற்ற பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு பணியில் 18 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். தேர்வில் கல்வித்துறை பணியாளர்கள் மட்டுமின்றி, போலீசாரும் சோதனையிடுவர் என அறிவிக்கப்பட்டு உள்ளது. நீங்கள் தேர்விற்கு பல மாதமாக படித்து உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். தேர்வில் நீங்கள் உழைத்த உழைப்பிற்கு சரியான பலன் கிடைக்க தேர்வுக்காக கொடுக்கப்பட்டிருக்கும் 3 மணி நேரத்தையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வினாத்தாளில் உள்ள விடைகளை நன்கு வாசித்து தெளிவாக சிந்தித்து விடையளியுங்கள். எந்த பகுதியில் உள்ள வினாக்களுக்கு முதலில் விடையளிக்கலாம், பின்னர் எந்த பகுதிக்கு விடையளிக்கவும், கடைசியாக விடையளிக்க வேண்டிய வினாக்கள் எது என்பதை தேர்வுக்கு செல்லும் முன் முடிவெடுத்துக் கொள்ளவும். கணித வினாக்களுக்கு கூடுதல் நேரம் தேவைப்படும். எனவே மற்ற பாடத்தில் நேரத்தை மிச்சம் செய்யவும். பொதுவாக செய்யும் தவறு கேள்விக்கு மாற்றி விடையளிப்பது. ஒவ்வொரு மதிப்பெண்ணும் மிக அவசியம் எனவே சரியான விடையை வட்டமிடவும். தெரியாத வினாக்களுக்காக விடையளிப்பதற்கு அதிக நேரம் செலவிடமால் அடுத்த கேள்வி செல்லவது நல்லது. இறுதியாக விடை தெரியாக வினாக்களுக்கு சிந்தித்து விடையளித்துக் கொள்ளலாம். இறுதியில் அனைத்து கேள்விகளும் பதில் அளிக்கப்பட்டதா என சரி பார்த்துக் கொள்ளவும். தைரியமாகவும் தன்னம்பிக்கையுடனும் தேர்வை எதிர்கொள்ளுங்கள் வெற்றி உங்களதே.
THANKS: ONE INDIA

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக