வெள்ளி, 28 ஏப்ரல், 2017

நாளை முதல் TET தேர்வு நடைபெறுகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் முதல் தாள் தேர்வு தமிழகம் முழுவதும் 598 மையங்களில் நாளை நடக்கிறது. இந்த தேர்வில் சுமார் 2 லட்சத்து 37 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். தமிழகத்தில் நாளை டிஇடி முதல் தாள் தேர்வு நடக்கிறது. இதற்காக மொத்தம் 598 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 27 மையங்களில் 10  ஆயிரத்து 147 பேர் எழுதுகின்றனர். தேர்வு எழுதுவோர் காலை 8.30 மணிக்கே தேர்வு மையத்துக்கு வர வேண்டும். 9.30 மணி வரை சோதனை நடக்கும்.  கருப்பு மற்றும் நீல நிற மை பேனாக்கள்  மூலம் ஓஎம்ஆர் தாளில் அடையாளம் வைத்து விடைஅளிக்க வேண்டும். 

தேர்வு முடிந்த பிறகு ஓஎம்ஆர் தாளின் பிரதியை எடுத்து செல்லலாம். அச்சிட்ட அல்லது கையால் எழுதிய தாள்கள் எதையும் எடுத்து செல்லக்கூடாது. தேர்வு விதிகளை மீறுவோர் மீது குற்றவியல் வழக்கு தொடரப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் எச்சரித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக