சனி, 22 ஏப்ரல், 2017

விடுபட்ட வாக்காளர்களுக்காக ஜூலை 1ல் சிறப்பு திருத்தப் பணி.

கடந்த ஆண்டு வாக்காளர் பட்டியலில் சேராமல் விடுபட்டோருக்காக, சிறப்பு சுருக்க திருத்தப் பணி ஜூலை 1ல் துவங்குகிறது. கடந்த ஆண்டு செப்.1 முதல் செப்.30 வரை வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தப் பணி நடந்தது. வாக்காளர்களின் இறுதி பட்டியல் ௨௦௧௭ ஜன.5 ல் வெளியிடப்பட்டது. 
 
இதில், 18 மற்றும் 19 வயது பூர்த்தி அடைந்தோரில் பலர் சேர்க்கப்படாமல் விடுபட்டது தெரியவந்தது.இதனால் விடுபட்டோர்களுக்காக மீண்டும் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தப் பணியை ஜூலை 1 முதல் ஜூலை 31 வரை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. மேலும், வாக்குச்சாவடிகளில் 2 நாட்கள், சிறப்பு முகாம்களும் நடத்தப்பட உள்ளன. 2017 ஜன.1ல் 18 மற்றும் 19 வயது பூர்த்தியடைந்தோர் வாக்காளர்களாக சேரலாம். மற்றவர்கள் செப்டம்பர் (அ) அக்டோபரில் நடக்கும் திருத்தப் பணியின்போது சேர்ந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக