TET லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
TET லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 12 நவம்பர், 2017

" TET " முடிக்காத பட்டதாரிகளுக்கு, 'ஜாக்பாட்'.

பள்ளிக்கல்வித்துறையில், 2010க்கு முந்தைய விளம்பரத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, தகுதி தேர்வு தேவையில்லை என, அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த, 2011, நவ.,15ல், தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு, 'டெட்' தேர்வு கட்டாயம் என உத்தரவிடப்பட்டது.இந்த அறிவிப்பு வந்த பின், 2011, டிசம்பரில், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,யால், பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களில் ஒரு தரப்பினருக்கு, டெட் அறிவிப்புக்கு முன்பே, சான்றிதழ் சரிபார்ப்பு நடந்ததால், டெட் தேர்வில் விலக்கு அளிக்கப்பட்டது.

புதன், 25 அக்டோபர், 2017

TET நிபந்தனை ஆசிரியர்களின் பல்வேறு நீதிமன்ற வழக்குகளின் வாதம் நவம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைப்பு.

TET நிபந்தனை ஆசிரியர்களின் பல்வேறு நீதிமன்ற வழக்குகளின் வாதம் நவம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைப்பு - தமிழக அரசின் கருணைப் பார்வைபட்டால் அனைத்து வழக்குகளுக்கும் முழு தீர்வுக்கு வாய்ப்பு.

ஞாயிறு, 16 ஜூலை, 2017

TET 2017 – தகுதி மதிப்பெண்கள் பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைத்தல் – சார்பு.

ஆசிரியர் தேர்வு வாரியம்
குறிப்பாணை எண். 306 /TET /2017 நாள் 11.07.2017
பொருள் : ஆசிரியர் தேர்வு வாரியம் - ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 2017 – தகுதி மதிப்பெண்கள் பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைத்தல் – சார்பு.

புதன், 12 ஜூலை, 2017

சிறப்பாசிரியர் TET தேர்வு: இளம் பட்டதாரிகளுக்கு சிக்கல்.

தொழில் ஆசிரியர் சான்றிதழ் படிப்பை, 10 ஆண்டுகளாக நடத்தாததால், அரசின் சிறப்பாசிரியர்களுக்கான போட்டி தேர்வில், இளம் பட்டதாரிகள் பங்கேற்க முடியாத நிலை உருவாகிஉள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில், ஓவியம், தையல், இசை மற்றும் உடற்கல்வி என, நான்கு படிப்புகளில், சிறப்பு பாட ஆசிரியர்களாக, 2,500 பேர் பணிபுரிகின்றனர். மேலும், 5,166 இடங்கள் காலியாக உள்ளன. இதில், 1,188 இடங்களை நிரப்ப, ஆகஸ்ட், 19ல், போட்டித் தேர்வு நடக்க உள்ளது.

செவ்வாய், 4 ஜூலை, 2017

அடுத்தது என்ன ? TET 2017 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேவையான வழிகாட்டி பதிவு.

TET 2017 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேவையான வழிகாட்டி பதிவு - 
பிரதீப் ப.ஆ.

தேர்ச்சி :
இட ஒதுக்கீடு பிரிவினர் 82 மதிப்பெண்
பொது பிரிவினர் 90 மதிப்பெண் பெற்று இருப்பின் தேர்ச்சி பெற்றவர் ஆவர்

அடுத்தது என்ன ?

'TET - 2017' தகுதி தேர்வில் 4.64 சதவீதம் தேர்ச்சி - தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்.

ஆசிரியர் பணிக்கான 'டெட்' தகுதி தேர்வு எழுதிய 7.53 லட்சம் பேரில், 4.64 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணிதம், அறிவியல் பாடப்பிரிவில் தேர்ச்சி குறைந்துள்ளது.

1,114 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்.

சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு அறிவிப்பு வெளியிட்டது. அதில் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து, பணி நியமனம் பெற்று, இன்னும் பணியில் சேராதவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.

அதன்படி வேலையில்லாத ஏராளமான பட்டதாரி ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இந்த நிலையில் 1,114 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் அளிக்கப்பட்டு உள்ளது.

திங்கள், 3 ஜூலை, 2017

TNTET - Paper 1 & 2 - New weightage கணக்கிடும் முறை !!

*Paper 2 Calculation*
முதலில் உங்களின் +2 மதிப்பெண் உதாரணமாக 1050,
Plus 2
1050/1200*100=87.5 87.5/100*10=8.75
Degree
52% so 52/100*15=7.8
BEd
86% 86/100*15=12.9
TET 102 102/150*100=68 68/100*60=40.80
TOTAL Weightage: 70.25.
*Paper 1 - க்கான வழிமுறை*
+2 - மதிப்பெண் 1050
1050/1200*100=87.5 87.5/100*15=13.25
DTEd
86% 86/100*25=21.5
TET 91 91/150*60=36.4
TOTAL 71.15

'TET' தகுதி தேர்வு முடிவுகள்:தேர்வில், எத்தனை பேர் தேர்ச்சி பெற்றனர்; தோல்வி அடைந்தனர் போன்ற விபரங்களை, டி.ஆர்.பி., வெளியிடவில்லை.

ஆசிரியர் பணிக்கான, 'டெட்' தகுதித் தேர்வு முடிவுகள்  வெளியிடப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேருவதற்கான, 'டெட்' தகுதித் தேர்வு, மூன்று ஆண்டுகளுக்குப் பின், தமிழகத்தில், ஏப்., 29, 30ம் தேதிகளில் நடந்தது.