திங்கள், 3 ஜூலை, 2017

'TET' தகுதி தேர்வு முடிவுகள்:தேர்வில், எத்தனை பேர் தேர்ச்சி பெற்றனர்; தோல்வி அடைந்தனர் போன்ற விபரங்களை, டி.ஆர்.பி., வெளியிடவில்லை.

ஆசிரியர் பணிக்கான, 'டெட்' தகுதித் தேர்வு முடிவுகள்  வெளியிடப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேருவதற்கான, 'டெட்' தகுதித் தேர்வு, மூன்று ஆண்டுகளுக்குப் பின், தமிழகத்தில், ஏப்., 29, 30ம் தேதிகளில் நடந்தது.


இடைநிலை ஆசிரியருக்கான முதல் தாளில், 2.41 லட்சம் பேரும், பட்டதாரி ஆசிரியருக்கான இரண்டாம் தாளில், 5.12 லட்சம் பேரும் பங்கேற்றனர்.இந்தத் தேர்வுக்கான தோராய விடைக்குறிப்பு, மே, 22ல் வெளியிடப்பட்டு, கருத்துக்கள் கேட்கப்பட்டன. பின், இறுதி விடைக்குறிப்பு தயாரிக்கப்பட்டு, கடந்த வாரம் விடை திருத்தம் முடிந்தது. நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, 'டெட்' தேர்வு முடிவுகளை, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது. www.trb.tn.nic.in என்ற டி.ஆர்.பி., இணையதளத்தில், தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

         இந்த தேர்வில், எத்தனை பேர் தேர்ச்சி பெற்றனர்; தோல்வி அடைந்தனர் போன்ற விபரங்களை, டி.ஆர்.பி., வெளியிடவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக