ஞாயிறு, 30 ஜூலை, 2017

ஒரு இருபது வயது இளைஞன் இந்த உலகத்தையே என் காலடியில் கொண்டு வரப்போகிறேன் என்று சொன்னால் நாம் என்ன சொல்லியிருப்போம்...?!

ஒரு இருபது வயது இளைஞன் இந்த உலகத்தையே என் காலடியில் கொண்டு வரப்போகிறேன் என்று சொன்னால் நாம் என்ன சொல்லியிருப்போம்...?!
என்ன உலக வரைபடம் வாங்கி உன் காலுக்குக் கீழே போட்டுக்கொள்ளப் போகிறாயா என்று தானே எள்ளி நகைத்திருப்போம்...

ஆனால் சொன்னதோடு மட்டுமல்லாமல் சொன்னதில் சுமார் 70 சதவீதத்தை செய்தும் காட்டியவன் மாவீரன் அலெக்சாண்டர்...
அவன் வாழ்வில் நடந்த ஒரு சுவையான சம்பவம்...
தன் 24 வது வயதில் பாரசீகத்தின் மீது போர் தொடுக்கிறான் அலெக்சாண்டர். படை மரக்கலங்களில் போய் இறங்கி ஒரு மலை மீது முகாமிட்டிருக்கிறது.
அன்றிரவு கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவர்களுடைய மரக்கலங்கள் அனைத்தும் தீப்பற்றி எரிகின்றன.
வீரன் ஒருவன் ஓடி வந்து அரசே நம் மரக்கலங்கள் அனைத்தும் தீப்பற்றி எரிகின்றன என்று பதற்றத்தோடு சொல்கிறான். படையே பதறுகிறது. அலெக்சாண்டரிடம் எந்த சலனமும் இல்லை.
வீரன் திரும்பக் கேட்கிறான் என்ன அரசே மரக்கலங்கள் எரிகின்றன என்கிறேன் நீங்கள் ஒன்றும் சொல்லாமல் இருக்கிறீர்களே என்கிறான்.
அப்போது அலெக்சாண்டர் வீரர்களை நோக்கி சொல்கிறான், நான் தான் மரக்கலங்களை எரிக்கச் சொன்னேன். வீரர்கள் அனைவரும் வியப்போடு பார்க்கிறார்கள்.
அலெக்சாண்டர் தொடர்கிறான்...
வீரர்களே இந்த மரக்கலங்களை காணும்போதெல்லாம் உங்களுக்கு எப்போது ஊருக்குப் போவோம் என்கிற எண்ணம் வரும் அதனால் நீங்கள் இருமனதோடு போர் செய்வீர்கள். இருமனதோடு போர் புரிந்தால் வெற்றி பெற முடியாது. அதனால் தான் மரக்கலங்களை எரிக்கச் சொன்னேன்.
இப்போது உங்களுக்கு ஒரே வாய்ப்பு தான் வெற்றி அல்லது வீர மரணம் எது வேண்டுமோ நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்றான்....
# இருமனதோடு அலைபாய்ந்து கொண்டிருப்பவர்களால் எந்த செயலிலும் வெற்றியைத் தொடக் கூட முடியாது. ஒரே மனதோடு, தீர்க்கமான முடிவோடு களம் இறங்கி போராடுபவர்கள் தான் வெற்றி என்னும் கனியை ருசிக்க முடியும் என்பது அலெக்சாண்டரின் வாழ்க்கை நமக்குத் தரும் பாடம்.⁠⁠⁠⁠

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக