ஞாயிறு, 30 ஜூலை, 2017

ஆசிரியர் பற்றிய பொன்மொழிகள்.

1. நான் உயிரோடு இருப்பதற்கு, என் தந்தைக்குக்
கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், சிறப்பாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்குக் கடமைப்
பட்டிருக்கிறேன். – மாவீரன் அலெக்ஸôண்டர்

2. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர்;
போதிப்பவர் எல்லாம் ஆசிரியர் ஆகார். – கதே


3. வறட்டுப் பிடிவாதம் கொண்ட மனிதர்களுக்கு அவர்கள் அடையும் நஷ்டங்களே ஆசிரியர்கள்.
– ஷேக்ஸ்பியர்

4. தாயின் முகம்தான் குழந்தையின் முதல்
பாடப் புத்தகம். – காந்தியடிகள்

5. கல்விக்கூடம் ஒரு தோட்டம்; மாணவர்கள்
செடிகள்; ஆசிரியர்கள் தோட்டக்காரர்கள்.
– ஜிக்ஜேக்ளர்

6. சராசரி ஆசிரியர் பாடத்தை நடத்துகிறார். சிறந்த ஆசிரியர் நடைமுறை உதாரணங்களோடு
கற்பிக்கிறார். உன்னதமான ஆசிரியர்
உயிரோட்டத்தை ஏற்படுத்துகிறார்.
– வில்லியம் ஆல்பர்ட்

7. இயற்கைதான் மிகச் சிறந்த ஆசிரியர். – கார்லைல்

8. சிறந்த ஆசிரியருக்குக் கற்பனைத் திறன் உண்டு. அவர்கள் மாணவர்களைத் துல்லியமாக மதிப்பீடு செய்வார்கள். அவர்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். புதிய சிந்தனைகளையும் வளர்ச்சிகளையும் பின்பற்றுவார்கள்.
– பெர்ஷியா ஆக்ஸ்டெட்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக