ஞாயிறு, 30 ஜூலை, 2017

அப்துல்கலாம் புகழஞ்சலி - கவிப்பேரரசு வைரமுத்து

தேசியக் கொடியும் அசைந்து சொல்லும்
கலாம் கலாம்
சலாம் சலாம்

தேசம் முழுக்க
எழுந்து சொல்லும்
கலாம் கலாம்
சலாம் சலாம்


கல்லும் முள்ளும் புல்லும் சொல்லும்
கலாம் கலாம்
சலாம் சலாம்

காலம் கடந்து காலம் சொல்லும்
கலாம் கலாம்
சலாம் சலாம்

*

நேர்மை என்பது நெஞ்சில் விளைந்தால்
நிச்சயம் நற்குணம் உண்டாகும்
நற்குணம் நிறைந்த உறவுகளாலே
ஒற்றுமை என்பது உருவாகும்

ஒற்றுமை மிகுந்த நாட்டில்தானே
ஒழுக்கம் என்பது உருவாகும்
ஒழுக்கம் காக்கும் நாடுகளாலே
உலக அமைதி நிலையாகும்

வள்ளுவர் போலே வாய்மை வகுத்த  
நல்லவர் நீங்கள் என்பதனாலே               கலாம் கலாம்
சலாம் சலாம்
 *
பாதி புத்தனும்
பாதி காந்தியும்
பகிர்ந்து படைத்தது நீயா?
பாதி நியூட்டனும்
பாதி ஐன்ஸ்டனும்
கலந்து செய்ததுன் கையா?

இந்திய நாட்டை விண்வெளிமேலே
ஏற்றி வைத்ததும் பொய்யா?
நாளை இந்தியா வாழும் வாழ்வுமே
வல்லரசாக அய்யா

தூங்கிக் காண்பது கனவே அல்ல
தூங்க விடாததே கனவு என்றாயே
கலாம் கலாம்
சலாம் சலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக