வேலைவாய்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேலைவாய்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 10 டிசம்பர், 2017

8000 ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு: 21க்குள் விண்ணப்பிக்க அழைப்பு.

விளம்பர எண். B/45706/CSB-2017/AWES தேதி: 30 Nov 2017*

நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ராணுவ பொது  பள்ளிகளில் 137 பள்ளிகளில் காலியாக உள்ள 8000 ஆசிரியர்  முதுகலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ராணுவ நலவாரிய கல்விச்சங்கம் வெளியிட்டுள்ளது. 

வெள்ளி, 8 டிசம்பர், 2017

தமிழகத்தில் உள்ள 27 மாவட்ட ரேஷன் கடையில் 10th 12th படித்தவர்களுக்கு அரசு 2767 காலி பணி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றது.

தமிழகத்தில் உள்ள 27 மாவட்ட ரேஷன் கடையில் 10th 12th படித்தவர்களுக்கு அரசு 2767 காலி பணி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றது. இறுதிநாள் 15.12.2017 
ஊதியம் Rs.12000/-


TN Ration Shop Jobs 2018 – 2767 Vacancies

TNPSC: அறநிலையத்துறை தேர்வு அறிவிப்பு.

அறநிலையத்துறை உதவி கமிஷனர் பதவிக்கு, முதன்மை தேர்வு தேதியை, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.அறநிலையத்துறை உதவி கமிஷனர் பணியில், 3 காலியிடங்களுக்கு, முதன்மை எழுத்து தேர்வு, மார்ச், 10, 11ல் நடக்கிறது. தமிழ்நாடு சீர்திருத்தப் பள்ளி கண்காணிப்பு மற்றும் உளவியலாளர் பதவிக்கு, 8 இடங்களுக்கு, வரும், 19ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.

திங்கள், 4 டிசம்பர், 2017

கடற்படை பணியில் சேர வேண்டுமா!

புதுடில்லி, 'கடற்படையில் சேர விரும்பும் இளைஞர்கள், பொதுச் சேவை 
மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம்' என, கடற்படை அறிவித்து 
உள்ளது.இந்திய கடற்படை வெளியிட்டு உள்ள அறிக்கை:நாடு முழுவதும், 
2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுச் சேவை மையங்கள் உள்ளன. 

வெள்ளி, 1 டிசம்பர், 2017

தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு.

தமிழக அரசின் தோட்டக்கலைத் துறையில் காலியாக உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர், தோட்டக்கலை அதிகாரி போன்ற 130 பணியிடங்களுக்கு வரும் பிப். 24, 25-இல் எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி., நேற்று செவ்வாய்கிழமை (நவ.28) அறிக்கை வெளியிட்டுள்ளது.

செவ்வாய், 28 நவம்பர், 2017

வேலைவாய்ப்பு: தமிழக அரசில் பணி!

தமிழக அரசின் பல்வேறு துறையில் காலியாக உள்ள இளநிலை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 24

சனி, 25 நவம்பர், 2017

பரோடா வங்கியில் 427 சிறப்பு அதிகாரி வேலை!!

நாடு முழுவதும் பல்வேறு கிளைகளைக் கொண்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கியில், தற்போது காலியாக உள்ள 427 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய அரசு பள்ளிகளில் 683 பதவிக்கு நியமனம்.

மத்திய அரசின், நவோதயா பள்ளிகளில், எட்டு பதவிகளுக்கு, 683 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு, டிச., 13க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.மத்திய அரசின், நவோதயா வித்யாலயா பள்ளிகள், நாடு முழுவதும், 576 மாவட்டங்களில் செயல்படுகின்றன. 

வியாழன், 23 நவம்பர், 2017

தேசிய திட்ட அமலாக்கத்துறையில் 1270 உதவி பேராசிரியர் பணியிடங்கள்.

தேசிய திட்ட அமலாக்கத்துறையில் 1270 உதவி பேராசிரியர்பணியிடங்கள் மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின்கீழ் செயல்பட்டு வரும் தேசிய திட்ட அமலாக்கத்துறையில்"National Project Implementation Unit" காலியாக உள்ள1270 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

TNPSC: தமிழகம் முழுவதும் நூலக பணியாளர்கள் பணிக்கான அறிவிப்பாணையை TNPSC வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நூலக பணியாளர்களுக்கள் பணிக்கான அறிவிப்பாணையை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது

விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 20 எனவும் அறிவிப்பு

புதன், 25 அக்டோபர், 2017

ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு!

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் தலைமை வாங்கியான ரிசர்வ் வங்கியின் பல மாநிலங்களில் உள்ள அலுவலகங்களில் காலியாக உள்ள 623 "அசிஸ்டன்ட்" பணியிடங்களுக்கு விண்ணப்பிதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியான நபர்களுக்கு தேசிய அளவில் நடைபெறும் எழுத்துத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.இந்த எழுத்துத் தேர்வு இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது.

ஞாயிறு, 22 அக்டோபர், 2017

BE முடித்தவர்களுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் துணை மேலாளர் வேலை.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் 40 துணை மேலாளர் பணியிடங்களுக்க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு கேட்-2018 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களிடம் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Deputy Manager (Technical)

சனி, 21 அக்டோபர், 2017

பட்டதாரிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் 623 உதவியாளர் வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு!*



வங்கிகளின் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் 2017-2018-ஆம்ஆண்டிற்கான 623 உதவியாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 623 (இதில் சென்னைக்கு 15 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன)

செவ்வாய், 10 அக்டோபர், 2017

சத்துணவு மையங்களில் சமையலர் பணி-விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.

திருவள்ளூர் மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையலர் பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் எ.சுந்தரவல்லி தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் மாவட்ட சத்துணவுத் திட்டம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் காலிப்பணியிடத்துக்கு, நேரடியாக நியமனம் செய்வதற்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

திங்கள், 9 அக்டோபர், 2017

இராணுவத்தில் குரூப் “C” பணிகள்!!!

இராணுவத்தில் கீழ்க்கண்ட Group ’C’ பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்

வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:

பணியின் பெயர்: LDC

காலியிடங்கள்: 2 (UR-1, OBC-1)

சம்பளம்: 19,900

BSNL நிறுவனத்தில் 996 JAO வேலை: 15க்குள் விண்ணப்பிக்க அழைப்பு.



பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை கணக்காளர் அதிகாரி (Junior Accounts officer) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடமிருந்து அக்டோபர் 15க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.