தமிழக அரசின் தோட்டக்கலைத் துறையில் காலியாக உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர், தோட்டக்கலை அதிகாரி போன்ற 130 பணியிடங்களுக்கு வரும் பிப். 24, 25-இல் எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி., நேற்று செவ்வாய்கிழமை (நவ.28) அறிக்கை வெளியிட்டுள்ளது.
அறிக்கை எண்.29/2017 தேதி: 28.11.2017
பணி: உதவி தோட்டக்கலை இயக்குநர் (Assistant Director of Horticulture)
காலியிடங்கள்: 100
தகுதி: தோட்டக்கலைத் துறையில் எம்.எஸ்சி முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600-39,100 + தரஊதியம் ரூ. 5,400
பணி: தோட்டக்கலை அதிகாரி (Horticultural Officer)
காலியிடங்கள்: 29 + 1
தகுதி: தோட்டக்கலைத் துறையில் பி.எஸ்சி இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800 + தர ஊதியம் ரூ.5,100
தேர்வுக் கட்டணம்: ரூ.200
தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: எழுத்துத் தேர்வுக்கான விண்ணப்பங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்திலேயே சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.12.2017
வங்கி அல்லது அஞ்சலகங்கள் மூலமாக கட்டணம் செலுத்த டிச. 29 ஆம் தேதி கடைசி நாள். எழுத்துத் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 24 மற்றும் 25 தேதிகளில் நடைபெறுகிறது.
பதிவு மற்றும் தேர்வுக் கட்டணங்கள்: அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் போது பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணம் கடந்த மார்ச்சில் ரூ.50-லிருந்து ரூ.150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதிதாகப் பதிவு செய்வோர் மட்டுமே ரூ.150 செலுத்த வேண்டும். ஏற்கெனவே நிரந்தரப் பதிவுகளை வைத்திருப்போர் புதிதாகப் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. இதேபோன்று, ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் உள்ளிட்டோர் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இதர பிரிவினர் தேர்வுக் கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2017_29__not_horticultural.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக