வெள்ளி, 8 டிசம்பர், 2017

TNPSC: அறநிலையத்துறை தேர்வு அறிவிப்பு.

அறநிலையத்துறை உதவி கமிஷனர் பதவிக்கு, முதன்மை தேர்வு தேதியை, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.அறநிலையத்துறை உதவி கமிஷனர் பணியில், 3 காலியிடங்களுக்கு, முதன்மை எழுத்து தேர்வு, மார்ச், 10, 11ல் நடக்கிறது. தமிழ்நாடு சீர்திருத்தப் பள்ளி கண்காணிப்பு மற்றும் உளவியலாளர் பதவிக்கு, 8 இடங்களுக்கு, வரும், 19ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.

மருத்துவ துறையில், கதிரியக்க இயற்பியல் துறை உதவி பேராசிரியர் பணியில், 13 இடங்களுக்கு, வரும், 21ம் தேதி தேர்வு நடக்கும் என, டி.என்.பி.எஸ்.சி., செயலர், விஜயகுமார் தெரிவித்துள்ளார். கூடுதல் விபரங்களை, www.tnpsc.gov.in- என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக