CBSE லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
CBSE லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 14 நவம்பர், 2017

சி.பி.எஸ்.இ., அவகாசம்.

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிறந்த தேதி மற்றும் பெற்றோர் பெயர் மாற்றத்துக்கான அவகாசம், ஒரு ஆண்டிலிருந்து, ஐந்து ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, தேர்வு முடிவு வெளியான நாளில் இருந்து, ஐந்து ஆண்டுகள் வரை, பிறந்த தேதி மற்றும் பெற்றோர் பெயரை திருத்தம் செய்யலாம். இனி வரும் காலங்களில் தேர்வு எழுதுவோருக்கும், ஏற்கனவே, திருத்தம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கும், இந்த விதி பொருந்தும்.

திங்கள், 30 அக்டோபர், 2017

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு தரவரிசை: அரசு அதிரடி முடிவு.

நாடு முழுவதும் உள்ள, கே.வி., என்றழைக்கப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை, தரவரிசை அடிப்படையில் பட்டியலிட, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

ராணுவம், துணை ராணுவம் உட்பட, பணி இடமாற்றம் செய்யப்படும் பணியில் உள்ள மத்திய அரசுப் பணியாளர்களுக்கு ஒரே கல்வி முறையை வழங்கும் வகையில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவக்கப்பட்டன. இந்தப் பள்ளிகளின் தரம் மற்றும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், அவற்றை தரவரிசை அடிப்படையில் பட்டியலிட, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் முதல், இந்த தவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

செவ்வாய், 24 அக்டோபர், 2017

சிபிஎஸ்இ பள்ளிகளில் 10,12-ம் பொதுத்தேர்வு எழுத ஆதார் எண் கட்டாயம்.

சிபிஎஸ்இ முறையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு முதல் உத்தரவு அமலுக்கு வரும் என அனைத்து பள்ளிகளுக்கும் சிபிஎஸ்இ சுற்றிக்கை அனுப்பியுள்ளது

மாணவர்களின் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது

ஆதார் இல்லாதவர்கள் ஆதார் அட்டை எடுக்க விண்ணப்பித்த எண்ணை ஆன்லைனில் பதிவேற்றலாம்.

ஞாயிறு, 22 அக்டோபர், 2017

மாணவர்களின் வயது சிக்கலுக்கு தீர்வு CBSE அறிவிப்பால் உற்சாகம்.

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யில் மாணவர் சேர்க்கைக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்புக்கு, சி.பி.எஸ்.இ., தீர்வை அறிவித்துள்ளது.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளை பொறுத்தவரை, பல ஆண்டுகளாக வயது குழப்பம் நிலவுகிறது. பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் போது, சம்பந்தப்பட்ட, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இடம் கொடுக்க விருப்பம் இல்லாவிட்டால், வயதை காரணம் காட்டி, மாணவர்களின் விண்ணப்பத்தை நிராகரிப்பது வழக்கமாக உள்ளது.

சனி, 24 ஜூன், 2017

'அட்மிஷன்' எப்படி: சி.பி.எஸ்.இ., விளக்கம்.



நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, எப்படி மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. சி.பி.எஸ்.இ.,யின், 'நீட்' தேர்வு பொறுப்பு இணை செயலர், சன்யம்
பரத்வாஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

CBSE – NEET (UG) - 2017 RESULTS DECLARED.

Check Result : http://cbseresults.nic.in/neet17rpx/neetJ17.htm
According to CBSE, around 10.8 lakh candidates have appeared for NEET 2017. For General category candidates, the cutoff percentile is 50. Last year, around seven lakh candidates had appeared for NEET. So how much score was needed to get into a particular ranking range? Careers360 analysed the official result data of NEET 2016 to bring you insights on your expected rank range.

வெள்ளி, 23 ஜூன், 2017

இந்த ஆண்டு சிபிஎஸ்சி 10 - 12ஆம் வகுப்புக்கான தேர்வுகள் ஒரு மாதம் முன்பே தொடங்குகிறது.

ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான பொதுதேர்வுகள் நடத்தப்படும். இதற்கான கால அட்டவணையை சிபிஎஸ்சி அறிவிக்கும். ஆனால் இந்த வருடம் தேர்வை பிப்ரவரி மாதமே நடத்த முயன்று வருகின்றனர்.

இது பற்றி சிபிஎஸ்சி அதிகாரிகள், இந்த வருடம் பொது தேர்வை பிப்ரவரி மாதம் நடத்த இருக்கிறோம்.   இதனால் பள்ளி மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஏனெனில் மாணவர்கள் ஜனவரி மாதமே ஆயத்த தேர்வுக்கு தயாராகிவிடுகின்றனர்.

செவ்வாய், 13 ஜூன், 2017

சி.பி.எஸ்.இ., துணை தேர்வு ஆன்லைன் பதிவு.

சி.பி.எஸ்.இ., தேர்வில், தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள், மீண்டும் தேர்வு எழுதுவதற்கான, துணை தேர்வுக்கு, ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது.