ஞாயிறு, 16 ஜூலை, 2017

தவறு என்பது தவறிச் செய்வது. தப்பு என்பது தெரிந்து செய்வது என்பர்.

ஒரு சிறுவன் ஒரு கிண்ணத்தில் பால் எடுத்துக் கொண்டு வருகிறான். திடீரென்று கை நழுவி கிண்ணம் விழுந்து பால் சிந்தி விடுகிறது. இது தவறு.

ஆனால், பெரியவர்கள் குடம் நிறைய பாலை எடுத்துச் சென்று நடிகர்களின் ஆளுயரப் படத்திற்கு அபிஷேகம் செய்து வீணடிக்கிறார்களே அது குற்றம்.

இதனைச் சிந்தித்தால் குற்றம் எது? தவறு எது என்பது எளிதில் விளங்கும்.

தவறி பாலைக் கொட்டிய சிறுவனைத் தண்டிக்கிறோம்; தெரிந்தே பாலை வீணடிக்கிற பெரியவர்களைப் பாராட்டுகிறோம். இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக