ஞாயிறு, 30 ஜூலை, 2017

ஆடியில ஒன்னுவாங்குனா இன்னொன்னு ஃப்ரீன்னு விளம்பரம் ஓடுது...

ஆடியில ஒன்னுவாங்குனா இன்னொன்னு ஃப்ரீன்னு விளம்பரம் ஓடுது... ஆடியில ஏன் கல்யாணம் பண்ணக்கூடாதுன்னு ஏன் நம் முன்னோர்கள் சொல்லி வச்சிருக்காங்கன்னு இப்பப் புரியுது...🤔🤔
......................................................................

கொத்து புரோட்டா எவ்வளவுப்பா?
70ரூபாங்க...
இந்தா காசு ஒண்ணு பார்சல் கட்டு...
நல்லா கொத்து...
டொட்டட்டடடண்ட் டடடடண்ட்டட்ண்
டடடடண்ட்டண்ட் டடடடடடட...
நல்லா... இன்னும் வேகமா...
டொடொட்டடண்ட டடடடடடட்டடாண்ட
டண்டன் டடடடண்ட்
இன்னும் வேகமா தம்பி. ..
ட்டடடடடடடடடடடடடட
டடாண்டுடடடாண்டு டட்டாடுடடடடட....
தம்பி இன்னும் நல்லா...
சார் இதுக்கு மேல கொத்துனா
புரோட்டா பவுடர் தான் கிடைக்கும்...
ஓ அப்படியா சரிப்பா அதை அப்படியே கீழ
கொட்டிடு நான் வர்றேன்...
என்னா சார் காசு கொடுத்துட்டு கீழே
கொட்ட சொல்ற.. என்னாச்சு..?!!!!
விடுப்பா வீட்டுல மனைவியோட சண்டை
அதான் இங்க வந்து என் ஆத்திரத்தை
தீத்துகிட்டேன்.. வரட்டுமா...
.................................................................

நாட்டமை : நீ பண்ண தப்புக்கு, உன்
இரண்டு காதையும் அறுத்துடறேண்டா...!!!!

வேலு : ஐயா என்னை மன்னிச்சிடுங்க...!!!!!
என்னை குருடன்ஆக்கிடாதீங்க...!!!!

நாட்டாமை : மடையா...!! காதை அறுத்தா
எப்படி குருடனாவே...???

வேலு: அப்புறம் கண்ணாடிய எதுல மாட்டுறதாம்...?

நாட்டாமை: ?!?!?!?!?!?
.................................................................................

பிரண்டு மெடிகல் சாப்ள போன மறந்திட்டு வந்திட்டேன் , திரும்ப எடுக்க போனேன்.....

"மச்சி இந்தா போன் , நீ போன மறந்திட்டு போயிட்டத சொல்ல த்ரி டைம்ஸ் கால் பண்ணினேன் மச்சி நீ எடுக்கவே இல்ல , ஆனா அதே நேரத்துல உன் போனுக்கு சுரேஷ், சுரேஷ்ன்னு 3 மிஸ்டு கால் வந்திச்சு மச்சி ...... ஆமா அது யார் மச்சி என் பேருலே உனக்கு இன்னொரு பிரண்டு ???"

@ டேய் மச்சி நீயெல்லாம் மனுசனே இல்ல..... தெய்வப்பிறவிடா.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக