ஏழாம் எண்ணுக்கும், திருக்குறளுக்கும் உள்ள வியத்தகு உறவு மற்றும் மனிதனின் பிறந்த ஆண்டை கணக்கிட உதவும் இலக்கியமாக திருக்குறள் உள்ளதை, கணித வல்லுனர் உமாதாணு, ஆய்வு மூலம் கண்டுபிடித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: திருவள்ளுவர் என்ற பெயரில், ஏழு எழுத்துக்கள்; ஒவ்வொரு குறளிலும் ஏழு சீர்கள்; 1,330 குறள், 133 அதிகாரங்களின் கூட்டுத்தொகை ஏழு என, ஏழாம் எண்ணுடன் தொடர்பு உள்ளதுடன், ஏழால் வகுபடும் எண்களாகவும் உள்ளன. அதுமட்டுமின்றி, ஏழால் வகுபடக் கூடிய, 190 குறள்களின் எண்களை, 7, 14, 21. என அனைத்தையும் கூட்டினால், 1 லட்சத்து, 27 ஆயிரத்து, 15 வருகிறது. இதுவும் ஏழால் வகுபடும் எண்ணாக உள்ளது.
அதேபோல், ஜன., 1ல் ஒருவருக்கு பூர்த்திஅடைந்த வயதை, குறள் எண்ணிக்கையான, 1,330ல் இருந்து கழித்து வரும் எண்ணோடு, 686ஐ கூட்டினால், அவருடைய பிறந்த ஆண்டை அறியலாம். அதிலும், 686 என்ற எண்ணும், ஏழால் வகுபடக் கூடியதாகும்.இவ்வாறு உலகில், திருக்குறளை தவிர, வேறு எந்த இலக்கியத்திலும் கணிதத்திற்கும், மொழிக்கும் பிணைப்பு இருப்பது அரிது. இவ்வாறு உமாதாணு கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக