ஞாயிறு, 30 ஜூலை, 2017

ஒரு நாள் ஆசிரியர் ஒரு கேள்வி கேட்டார்....

ஒரு நாள் ஆசிரியர் ஒரு கேள்வி கேட்டார்.

"ரொட்டியை எப்படிச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்?''

"வெண்ணெய் தடவிச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்'' என்றான் ஒரு மாணவன்.

"ஜாம் தடவிச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்'' என்றான் இன்னொரு மாணவன்.


"பாலுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்''

""தேனுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்''

""பஞ்சாமிர்தத்தோடு சாப்பிட்டால் நன்றாக இருக்கும்''.

பலரும் பல கருத்துகளைச் சொன்னார்கள்.

இறுதியாக ஒரு மாணவன் எழுந்து, ""ரொட்டியை மற்றவருடன் பகிர்ந்து கொண்டு சாப்பிட்டால்தான்
மிகவும் சுவையாக இருக்கும்'' என்று கூறினான்.

ஆசிரியர் மிகவும் மகிழ்ந்து போய் அந்த மாணவனைப் பாராட்டினார்.

மாணவர்களும் கரவொலி எலுப்பினர்... கரவொலி அடங்கவே வெகுநோரம் பிடித்தது..

அவ்வாறு பாராட்டுப் பெற்ற மாணவர் வேறு யாருமில்லை.

நான் தான்....☺☺ 1 வது படிக்கும் போது இது நடந்தது..

சொல்லவேண்டாம் என்று தான் நினைத்தேன் இருந்தாலும் மனசு கேக்கலை....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக