ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில்,
சிந்தித்து பதில் எழுதும் வினாக்களே இடம் பெற உள்ளன. விடைத்தாள் திருத்தத்திலும், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.
தமிழகம் முழுவதும், ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு, ஏப்., 29, 30ல்
நடக்கிறது. இதற்கான, முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. பள்ளி
மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்ததும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்,
'டெட்' தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
ஏப்., 29ல் நடக்கும் தேர்வுக்கு, 598 பள்ளிகளிலும், ஏப்., 30ல், 1,263
பள்ளிகளிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. தேர்வு மையங்களுக்கு,
அலைபேசி போன்ற, மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல தடை
விதிக்கப்படுகிறது.தேர்வுக்கான வினாத்தாளை, டி.ஆர்.பி., அதிகாரிகள் இறுதி
செய்து, அச்சுக்கு அனுப்பியுள்ளனர். வினாத்தாள், லீக் ஆகாமல் இருக்க,
தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்வில்,
வினாத்தாள் மிக கடினமாக இருக்கலாம் என, கூறப்படுகிறது.
இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்ததாவது: 'டெட்' தேர்வில்
தேர்ச்சி பெறும் ஆசிரியர்கள், 20 ஆண்டுகளாவது பாடம் நடத்த வேண்டிய கட்டாயம்
உள்ளது. 20 ஆண்டுகளில்
ஏற்படும் தொழில்நுட்ப வளர்ச்சி, புதிய படிப்புகளின் தேவை போன்றவற்றுக்கு ஏற்ப, பாடத்திட்டங்கள் மாறும்; பொது தேர்விலும் கட்டுப்பாடுகள் வரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக