சென்னை: 'அரசு பள்ளிகளில், 1,114 ஆசிரியர் காலியிடங்களுக்கு, மே, 10 வரை
விண்ணப்பிக்கலாம்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,
அறிவித்துள்ளது.
இது குறித்து, டி.ஆர்.பி., தலைவர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள செய்திக்
குறிப்பு: அரசு பள்ளிகளில், 1,114 பட்டதாரி ஆசிரியர் இடங்கள், ஏற்கனவே,
'டெட்' தகுதித் தேர்வு முடித்தவர்கள் மூலம் நிரப்பப்பட உள்ளன. ஆசிரியர்
தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டு, பணியில் சேராதவர்கள், டி.ஆர்.பி.,
இணையதளத்திலுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து, மே, 10க்குள்
சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த பதவிக்கு, ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட சான்றிதழ்
சரிபார்ப்பு விபரங்கள் மற்றும் சுயவிபரங்கள் அடிப்படையில், சான்றிதழ்
சரிபார்ப்பு நடக்கும். அவர்கள், மீண்டும் தனியாக விண்ணப்பிக்க
வேண்டியதில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக