பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோடை வெயில் அதிகம் உள்ளது. அதன் தாக்கம்
அதிகமாக இருக்கும். இந்த வாரம் 21-ந் தேதி வரை பள்ளிகள் தொடர்ந்து
நடக்கிறது. மக்கள் உணர்வுகளை அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுத்துள்ளது.
நடுநிலைப் பள்ளிகளுக்கு 22-ந் தேதியில்
இருந்து விடுமுறை விடப்படுகின்றன. ஆனால் தொடக்கப்பள்ளிகளுக்கு 29-ந்
தேதிவரை பள்ளிக்கூடம் உள்ளது. எனவே, கோடை வெப்பம் காரணமாக தொடக்கப்
பள்ளிக்கூடங் களுக்கும் 22-ந் தேதியில் இருந்து விடுமுறை அளிக்க முடிவு
செய்யப்பட்டுள்ளது. 22-ந் தேதியில் இருந்து 29-ந் தேதிவரை நடக்கும்
தேர்வுகள் அதற்கேற்றபடி மாற்றி அமைக்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக