செவ்வாய், 25 ஏப்ரல், 2017

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் 6 இயக்குநர்கள் திடீர் பணியிட மாற்றம்.

சென்னை: தமிழக பள்ளிக் கல்வித் துறையில் 6 இயக்குநர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை பள்ளி கல்வித் துறை இயக்குநரகம் பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக பள்ளி கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
1.பள்ளிக் கல்வித் துறை தொடக்கக் கல்வி இயக்குநராக இருந்த
இளங்கோவன் தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
2.தமிழ்நாடு பாடநூல் கழக செயலாளராக பழனிசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
3.ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநராக
அறிவொளி நியமிக்கப்பட்டுள்ளார்.
4.முறைசாரா கல்வி இயக்குநராக ராமேஸ்வர முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
5.தொடக்ககல்வி இயக்குநராக கார்மேகமும் நியமிக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக