தேர்வர்கள் மையத்திற்கு காலை 8.30 மணிக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு மைய நுழைவாயிலில் காவலர்கள் நடத்தும் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
தேர்வர்கள் தேர்வறைக்குள் நுழைவுச் சீட்டு (ஹால் டிக்கெட்) மற்றும் நீலம்
அல்லது கருப்பு பந்துமுனைப் பேனா மட்டுமே எடுத்துச் செல்ல
அனுமதிக்கப்படுவர்.
தேர்வு நடைபெறும் வேளையில், தேர்வர்கள் வெளியில் செல்ல அனுமதியில்லை.
தேர்வு முடிந்ததும் ஓஎம்ஆர் விடைத்தாளின் பிரதியை (கார்பன் காபியை) தேர்வர் பெற்றுச் செல்ல வேண்டும்.
அச்சிடப்பட்ட அல்லது கையால் எழுதப்பட்ட தாள்கள் எவற்றையும் தேர்வு அறைக்குள் வைத்திருக்க அனுமதியில்லை.
கைபேசி, கைக்கணினி, மடிக்கணினி, தரவி அல்லது கணக்கிடும் கருவிகள் போன்றவற்றை இத்தேர்வறைக்குள் வைத்திருக்க அனுமதியில்லை.
தேர்வறைக்குள் அறைக் கண்காணிப்பாளர் அல்லது சக தேர்வர் ஆகியோருடன் முறை தவறி நடப்பவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்த விதிமுறைகளை பின்பற்றாத தேர்வர்கள் அன்றையத் தேர்வினைத் தொடர்ந்து
எழுத அனுமதிக்கப்படாததோடு, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளைத்
தொடர்ந்து எழுத நிரந்தரத் தடை விதிக்கப்படுவதுடன் காவல்துறை மூலம்
குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக