சனி, 22 ஏப்ரல், 2017

ஆசிரியர்கள் இட மாறுதல் கலந்தாய்வு மே 19–ந்தேதி தொடங்குகிறது 24–ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

ஆசிரியர்கள் இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு 
மே மாதம் 19–ந்தேதி முதல் 31–ந்தேதி வரை நடைபெறுகிறது. 
மாறுதலுக்கு வருகிற 24–ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் 
என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் 
கூறியிருப்பதாவது:–
 
ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு 

‘‘ஆசிரியர் சமுதாயத்தின் நலனுக்காக வெளிப்படையான 
ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு பொதுமாறுதல் வழிகாட்டி 
விதிமுறைகள் தொடர்ந்து கடைபிடிக்கப்படும்’’, என்ற அரசின்
 முடிவிற்கேற்ப, 2017–2018–ஆம் கல்வி ஆண்டில் அரசு, நகராட்சி, 
தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 
பணிபுரிந்து வரும் தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்து 
வகை ஆசிரியர்களுக்கும் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்து 
வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கான அரசாணை 
வெளியிடப்பட்டுள்ளது.

பொது மாறுதல் கலந்தாய்வு இணையதளத்தின் வாயிலாக
 நடைபெறவுள்ளது.

விண்ணப்பம் 

ஆசிரியர்களின் பொது மாறுதல் தொடர்பாக, ஆசிரியர்களிடமிருந்து 
மாறுதல் விண்ணப்பங்கள் வருகிற 24–ந்தேதி முதல் மே மாதம் 
5–ந்தேதி வரை பெறப்படும்.

அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 
மற்றும் அனைத்து வகை ஆசிரியர்களை பொறுத்தவரை 
மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திலும், தொடக்க மற்றும் 
நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களைப் பொறுத்தவரை மாவட்ட 
தொடக்க கல்வி அலுவலகம், உதவி தொடக்க கல்வி 
அலுவலகத்திலும் மாறுதல் விண்ணப்பங்கள் பெறப்படும். 
மே மாதம் 19 முதல் மே 31–ந்தேதி முடிய மாறுதல் மற்றும் பதவி
உயர்வு கலந்தாய்வு நடைபெறும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக