இஞ்சி மூட்டு
வலி உட்பட எந்த வலியையும் போக்கும். கொதிக்கும் தண்ணீரில், இரண்டு துண்டு
இஞ்சியை நறுக்கிப் போட்டு, அந்த தண்ணீரை குடித்து வாருங்கள்; அப்புறம்
தெரியும் இஞ்சியின் மகிமை. மோர், ஜூஸ் என்று, எந்த பானம் குடித்தாலும்,
அதில் ஒரு ஸ்பூன் இஞ்சி சாறை கலந்து குடியுங்கள்.
* மஞ்சள், அருகம்புல் மற்றும் சுண்ணாம்பு
கலந்து நகச்சுற்று ஏற்பட்டிருக்கும் விரலில் கட்ட நகச்சுற்று குணமாகும்.
அல்லது கொழுந்து வெற் றிலையுடன் சுண் ணாம்பு சேர்த்தும் கட்டலாம்.
* வேப்பம் பூவை உலர்த்தி, தூள் செய்து,
வெந்நீரில் கலந்து உட்கொள்ள, வாயுத் தொல்லை நீங்கும். வேப்ப எண்ணெயை
காய்ச்சி,சேற்றுப்புண் உள்ள இடங்களில் தடவ குணம் கிடைக்கும்.
* உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு
முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யைச் சாப்பிட்டு வந்தால்,
இரத்தக் குழாயிலே கொலஸ்ட்ரால் படியாதவாறு தடுக்கும்.
* வாய்ப் புண் வந்தவருக்குப் பகை காரம்.
முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச்
சாப்பிட்டு வந்தால் எளிதில் ஆறும்.
* ஜாதிக்காயைச் சிறுசிறு துண்டுகளாகச் சீவி
அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி போக்கும். தயிர்,
மோர், இளநீர் ஆகியவற்றை மட்டும் ஏராளமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* இரவில் படுக்கப் போகும்முன் வெந்நீரில்
சிறிது தேன் கலந்து அந்த நீரில் வாயைக் கொப்பளித்து வந்தால் பற்களுக்குத்
தொந்தரவு கொடுக்கும் பாக்டீரியாக் கிருமிகள் செத்துப் போகும். பற்கள்
எனாமல் சிதையாமல் இருக்கும்.
* மஞ்சளை ஒரு கல்லில் உறைத்து ஒரு சலவைச்
சோப்புத் துண்டை அதில் குழப்பினால் சிகப்பாகப் பசைபோல் வரும். இதை வேனல்
கட்டியின் மேல் பூச, வேனல் கட்டி உடைந்துவிடும். சீழ் வெளியேறும்.
* நுனா இலையோடு சிறிதளவு சீரகம், நெற்பொரி
கலந்து தண்ணீர் விட்டு ஒரு சட்டியில் காய்ச்சி கஷாயம் செய்து குடித்து
வந்தால் நாவறட்சி அடங்கும்.
* வெள்ளைப் பூசணிக்காய் சாறில் ஒரு கரண்டித் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூளைச்சோர்வு நீங்கும். மூளை உற்சாகத்துடன் இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக