வியாழன், 27 ஏப்ரல், 2017

தமிழக அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு.

தமிழக அரசு ஊழியர்களுக்கு, 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த அகவிலைப்படி உயர்வு, ஜன. 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என முதல்வர் இடைப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த அகவிலைப்படி உயர்வால் 18 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த அகவிலைப்படி உயர்வால் அரசு ஊழியர்களின் ஊதியம் ரூ.244 முதல் ரூ.3080 வரை உயரும். ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.122 முதல் ரூ.1540 வரை ஊதியம் உயரும். இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.986.77 கோடி கூடுதலாக செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக