இன்ஜி., கவுன்சிலிங்கிற்கான விதிமுறைகள் இடம் பெற்ற, அதிகாரப்பூர்வ
அறிக்கையை, அண்ணா பல்கலை இன்று வெளியிடுகிறது.பிளஸ் 2 முடித்த மாணவர்கள்,
பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, அண்ணா பல்கலையின் இன்ஜி.,
கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும்.
வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஜூன், 27ல்
துவங்குகிறது. கவுன்சிலிங்கில் பங்கேற்க, மே, 1 முதல், 31 வரை, ஆன்லைனில்
விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். இதற்கான, அதிகாரப்பூர்வ அறிக்கை மற்றும்
விதிகள், இன்று வெளியாகின்றன. தமிழக அரசு சார்பில், அண்ணா பல்கலையின்,
மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் கமிட்டி அறிவிக்கும் விதிகளின்படி, மாணவர்
சேர்க்கை நடக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக