ஞாயிறு, 19 மார்ச், 2017

ருத்ராட்ச மகிமை.


ஜோதிட சாஸ்த்திரத்தின் படி ஏகமுக ருத்ராட்சம் சூரியனின் அதிர்வை பெறுகின்றது. இது இதய நோயை குணப்படுத்தும். வலது கண், தலைவலியைப் போக்கும். தோல் நோயை நீக்கும். சுவாச கோளாறுகளை நீக்கும்.

இந்த நோய் உள்ளவர்களோ அல்லது சூரியனின் ஆதிக்கம் குறைந்தவர்களோ ஏகமுக ருத்ராட்சத்தை அணியலாம்.

2 முக ருத்ராட்சம்:

சந்திரனின் ஆதிக்கம் உள்ளது.
சுவாச கோளாறுகள், மூளை வளர்ச்சி குன்றியவர்கள், இடது கண் பதிப்பு உடையவர்கள், நுரையீரல் கோளாறு உடையவர்கள் குடல் புண் உள்ளவர்கள், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் இதை அணியலாம்.

3 முக ருத்ராட்சம்:

ரத்த சம்பந்தமான நோய்கள் உடையவர்கள் இதை அணியலாம். கழுத்து, காது நோய் உடையவர்கள் ரத்த இறக்கம் (B.P.) குடற்புண், தீராத காயங்கள், எலும்பு சம்பந்தமான வியாதி உடையவர்கள் இதை அணியலாம். செவ்வாயின் அதிர்வுகள் 3 முக ருத்ராட்சதிற்கு உள்ளது.

4 முக ருத்ராட்சம்:

கணிதம், எழுத்தும், அறிவும் போன்றவற்றை 4 முக ருத்ராட்சம் ஆதிக்கம் செலுத்துகின்றது. பிஸினஸ் செய்பவர்களுக்கு மிக நல்லது. வாத நோய்கள், ஜுரம், மனம் சம்பந்தப்பட்டவியாதிகளுக்கு இது நல்லது. புதன் அதிர்வுகளை கொண்டது.

5 முக ருத்ராட்சம்:

கல்லீரல், கணையம், தொண்டை, பாதம், எலும்பு மஜ்ஜை போன்ற தொடர்பான வியாதிகளை போக்க வல்லது. பணப்புழக்கம், மதம் தொடர்பான விஷயங்கள், உலகாயுத விஷயங்களில் வெற்றி போன்றவற்றைத் தரவல்லது. கடுமையான ஏழ்மையிலிருந்து காப்பாற்றும் தன்மை உடையது. குரு கிரக அதிர்வுகளை கொண்டது.

6 முக ருத்ராட்சம்:

ஜனனேந்திரிய உறுப்புகளை நோயை நீக்க வல்லது. வாய்ப்புண், தொண்டை எரிச்சல், இசையில் நாட்டத்தை ஏற்படுத்தும். குடும்ப வாழ்க்கையில் பரஸ்பர அன்பைத் தரும்.

7 முக ருத்ராட்சம்:

மரண பயத்தைப் போக்கும். ஆயுளை நீடிக்கும். ஜலதோசத்தைப் போக்கும். இடுப்புக்கு கீழே உள்ள பகுதிகளில் நோயை நீக்கும். உடலில் உள்ள விசத் தன்மையை நீக்கும்.  மதுவிற்கு அடிமையானவர்களை விடுதலை தரும். கவலையைப் போக்கும். நம்பிக்கையையும், வெற்றியையும் தரும். சனியின் அதிர்வுகள் படைத்தது.

8 முக ருத்ராட்சம்:

8 முக ருத்ராட்சத்தின் கிரக தேவதை ராகு. சனிக்கு உடைய பலனே இதற்கு எனலாம். திடீர் பிரச்சனைகள், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், கால், சருமம், கண், சிறுநீரக பிரச்சனைகள், ரத்தத்தில் விஷம் சேருதல் போன்றவை 8 முக ருத்ராட்சம் அணிவதால் நீங்கும்.

9 முக ருத்ராட்சம்:

இதன் கிரக அதி தேவதை கிரகமான கேது. நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் கண், வயது சம்பந்தப்பட்ட கோளாறுகள் எல்லாம் 9 முக ருத்ராட்சம் நீக்கும் என சாஸ்த்திரங்கள் கூறுகின்றன.

10 முக ருத்ராட்சம்:

இதற்கு தனியாக அதிதேவதை இல்லை. இது எல்லா கிரகங்களையும் கட்டுப்படுதும் சக்தி படைத்தது. எந்த தீய கிரகத்தின் தன்மையையும் இது நீக்கும்.

11 முக ருத்ராட்சம்:

தியானம் செய்பவர்களுக்கு இது உதவும். யோக, தியான, ஆன்மிக வாழ்க்கையில் உள்ள சிக்கல்களை இது நீக்கும்.

12 முக ருத்ராட்சம்:

இதன் அதிதேவதை சூரியன். சூரியன் தீய அதிர்வுகளால் ஏற்படும் தீமையை இது நீக்கும்.

13 முக ருத்ராட்சம்:

6 முக ருத்ராட்சத்திற்குள்ள பலன்களே தான் இதற்கும், தியானம், ஆன்மிக வாழ்க்கை உயர்வுக்கு இது உதவும்.

14 முக ருத்ராட்சம்:

இதுவும் 7 முக ருத்ராட்சத்தைப் போல பலன் தரும். சனியின் தீய பலன்களை இது மாற்றும்.

 உங்கள் நட்சத்திரமும் நீங்கள் அணிய வேண்டிய ருத்ராட்சமும்

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் அதற்கு ஏற்ற ருத்ராட்சத்தை அணிவதால் ஆரோக்கியம் ஆன்மீகமும் நம்மை வந்தடைகின்றன!

கீழே ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் எத்தனை முக ருத்ராட்சத்தை அணியவேண்டும் என்று தரப்பட்டுள்ளது.

1.அஸ்வினி    கேது    – 9 முகம்
2.பரணி    சுக்கிரன்    – 6 முகம்
3.கார்த்திகை    சூரியன்    – 1,12அல்லது 11 முகம்
4.ரோகிணி    சந்திரன்    – 2 முகம்
5.மிருகசீர்ஷம்    செவ்வாய்    – 3 முகம்
6.திருவாதிரை    ராகு    – 8 முகம்
7.புனர்பூசம்    குரு    – 5 முகம்
8.பூசம்    சனி    – 7 முகம்
9.ஆயில்யம்    புதன்    –  4 முகம்
10.மகம்    கேது    – 9 முகம்
11.பூரம்    சுக்கிரன்    – 6 முகம்
12.உத்ரம்    சூரியன்    – 11,12 அல்லது 11 முகம்
13.ஹஸ்தம்    சந்திரன்    – 2 முகம்
14.சித்திரை    செவ்வாய்    – 3 முகம்
15.ஸ்வாதி    ராகு    – 8 முகம்
16.விசாகம்    குரு    – 5 முகம்
17.அனுஷம்    சனி    – 7 முகம்
18.கேட்டை    புதன்    – 4 முகம்
19.மூலம்    கேது    – 9 முகம்
20.பூராடம்    சுக்கிரன்    – 6 முகம்
21.உத்ராடம்    சூரியன்    – 1,12 அல்லது 11முகம்
22.திருவோணம்    சந்திரன்    – 2 முகம்
23.அவிட்டம்    செவ்வாய்    – 3 முகம்
24.சதயம்    ராகு    – 8 முகம்
25.பூரட்டாதி    குரு    – 5 முகம்
26.உத்திரட்டாதி    சனி    – 7 முகம்
27.ரேவதி    புதன்    – 4 முகம்
மேஷம்    செவ்வாய்    – 3 அல்லது 5 முகம்
ரிஷபம்    சுக்கிரன்    – 4 அல்லது 7 முகம்
மிதுனம்    புதன்    – 4 அல்லது 6 முகம்
கடகம்    சந்திரன்    – 2 அல்லது 3 முகம்
சிம்மம்    சூரியன்    – 3 அல்லது 12 முகம்
கன்னி    புதன்    – 4 அல்லது 6 முகம்
துலாம்    சுக்கிரன்    – 6 அல்லது 7 முகம்
விருச்சகம்    செவ்வாய்    – 2 அல்லது 5 முகம்
தனுசு    குரு    – 5 அல்லது 12 முகம்
மகரம்    சனி    – 6 அல்லது 7 முகம்
கும்பம்    சனி    – 6 அல்லது 7 முகம்
மீனம்    குரு    – 3 அல்லது 5 முகம்
ருத்ராட்சத்தை யார் யாரெல்லாம் அணியலாம்?

பிறந்த குழந்தை முதல் 100 வயது பாட்டி வரை யார் வேண்டுமானாலும்,எவர் வேண்டுமானாலும் ருத்ராட்சம் அணியலாம்.கர்ப்பிணிகள், உடல் ஊனமுற்றோர்கள், நோயாளிகள், மன நிலை பாதித்தவர்கள் என யாரும் ருத்ராட்சம் அணியலாம்.

ருத்ராட்சம் அணியாதாவர்கள் ஒரு மந்திரத்தை ஒருமுறை ஜபித்தால் எவ்வளவு பங்கு புண்ணியம் வருமோ, அதைவிடவும் நூறு மடங்கு புண்ணியம் ருத்ராட்சம் அணிந்தவர்களுக்கு ஜபித்தால் கிடைக்கும்;

ஒருபோதும் அடுத்தவர்கள் நீண்டகாலமாக பயன்படுத்திய ருத்ராட்சத்தைப் பயன்படுத்தக் கூடாது; இதில் விதிவிலக்குகள் உண்டு; அப்பா தனது வாழ்நாள் முழுவதும் அணிந்திருந்த ருத்ராட்சத்தை தனது மகன் அல்லது மகளுக்குத் தரலாம்; குரு தான் அணிந்திருந்த ருத்ராட்ச மாலையை தகுதி நிறைந்த சீடனுக்குத் தரலாம்;

சிறுவர், சிறுமியர் ருத்ராட்ஷம் அணிவதால் அவர்களின் படிப்புத் திறமை பளிச்சிடும்.

பெண்கள் ருத்ராட்ஷம் அணியக்கூடாது என சிலர் சொல்கிறார்களே?

ருத்ராட்ஷத்தை பெண்கள் அணிந்தால் தீர்க்க சுமங்களியாக மஞ்சள் குங்குமத்தோடு வாழ்வார்கள்.

இதனால் அவர்களுடைய கணவருக்கும் தொழிலில் வெற்றியு்ம் இல்லத்தில் லட்சுமி கடாசமும் நிறைந்திருக்கும்.

பெண்களின் பெருந்தெய்வமாக விளங்குபவள் ஆதிபராசக்தி அவள் ருத்ராட்ஷம் அணிந்திருப்பதை, கொந்தளகம் சடை பிடித்து விரித்து பொன்தோள் குழை கழுத்தில் கண்டிகையின் குப்பை பூட்டி என்று விவரிக்கிறது (அருணாசலபுராணம் (பாடல் எண் 330) பழி, பாவம் முதலியவற்றை முழுவதுமாகத் தீர்த்துக் கட்டுகிற திருநீறையும், ருத்ராட்ஷத்தையும் தனது திருமேனி முழுவதிலும் அகிலாண்டேஸ்வரி அணிந்து கொண்டாளாம். பராசத்திக்கு ஏது பழியும், பாவமும்? நமக்கு வழி காட்டுவதற்காகத்தானே அம்பிகையே ருத்ராட்ஷம் அணிந்து கொள்கிறாள்!.

எனவே பெண்கள் தாராளமாக அம்பிகை காட்டும் வழியைப் பின்பற்றி ருத்ராட்ஷம் அணிய வேண்டும்.

மேலும், சிவ மஹாபுராணத்திலும் பெண்கள் கட்டாயம் ருத்ராட்ஷம் அணிய வேண்டும் என்று சிவபெருமானே வலியுறுத்தியுள்ளார்.

ருத்ராட்ஷம் கண்டிப்பாக அணிய வேண்டுமா?

இன்று பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை ஆண் – பெண் இருபாலரும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிய வேண்டும்.

ஏனெனில் நம்மைப் படைத்ததே பாவங்களைப் போக்கி சிவபெருமானின் திருவடியை அடைவதற்காகவே நம் வாழ்க்கையில் வரும் கஷ்டம், வேதனை, துன்பம், வலி இவைகளிலிருந்து விடுபடுவதற்காகவே ருத்ராட்ஷம் அணிய வேண்டும்.

ருத்ராட்ஷம் அணிந்தால் மறுவிறவி இல்லை மஹா பேரானந்தமே. ருத்ராட்ஷம் அணிவதை சிலபேர் நீ அணியக்கூடாது சுத்தமானவர்கள் தான் அணிய வேண்டும் என்று சொல்வார்கள், அதைப் பொருட்படுத்தக் கூடாது.

இறைவனுக்கு ஒருவர் மீது கருணை இருந்தால் மட்டுமே ருத்ராட்ஷம் கழுத்தில் அணியும் பாக்கியம் கிடைக்கும். ருத்ராட்ஷம் முழுக்க முழுக்க சிவபெருமானுடையது.

சிவபெருமான் கண்களை விழித்து 1000 வருடங்கள் கடும் தவம் இருந்து அவர் கண்களில் இருந்து தோன்றியதே ருத்ராட்ஷம்.

ருத்ராட்ஷத்தை அணிந்து கொண்டவர்கள் சிவ குடும்பத்தில் ஒருவராவார். சிவபெருமான் தன் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு கஷ்டத்தையும், துன்பத்தையும் கொடுப்பாரா?. அதனால் யார் என்ன சொன்னாலும் கண்டிப்பாக ருத்ராட்ஷத்தை அணியவேண்டும்.

ருத்ராட்ஷம் அணிவதால் கொடிய பாவங்கள் தீரும். இதனால் நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களும் படிப்படியாகக் குறைந்து விடும்.

மேலும் ருத்ராட்ஷம் அணிபவருக்கு லஷ்மி கடாஷ்சமும், செய்யும் தொழிலில் மேன்மையும், சகலவிதமான ஐஸ்வர்யங்களும் ஏற்பட்டு பகவானின் பேரின்பமும், ஆனந்தமும் கிடைக்கும் என்று சிவ மஹா புராணம் அறுதியிட்டுக் கூறுவதையும் கருத்தில் கொள்க.

இது மட்டுமல்ல ருத்ராட்ஷம் அணிவதால் இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்றவற்றின் தீவிரம் குறைவதாக வெளிநாட்டவர்களின் ஆய்வுகள் கூறுகின்றன.

திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், வேலை வாய்ப்பு இல்லாதவர்களும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிந்து தினந்தோறும் 108 முறை எழுத்தாலோ மனதலோ பஞ்சாட்சரத்தை சொல்லிவந்தால்  மேற்கூறிய பிரார்த்தனைகள் நிறைவேறும்.

ருத்ராட்ஷம் அணிவதால் கடவுளின் கருணை கிட்டுமா?

சர்வ நிச்சயமாக அவன் அருளாலே அவன் தால் வணங்கி அவர் கருணை செய்தால்தான் அவருடைய நாமத்தைக்கூட நாம் சொல்ல முடியும்.

அப்படியிருக்க அவர் ருத்ராட்ஷத்தையே நமக்கு அளித்துள்ளாரே அதனால் திருநீறு தரித்தல், ருத்ராட்ஷம் அணிதல், பஞ்சாட்சர மந்திரமான “ஓம் நமசிவாய” உச்சரித்தல், இம்மூன்றும் ஒரு சேரச் செய்து வந்தால் முக்தி எனும் மஹா பேரானந்தத்தை அடைவீர். இம்மூன்றும் இந்து தர்மங்கள், தர்மத்தை விடாதவர்களை இறைவன் கைவிடமாட்டார்.

மேலும் நவகிரஹங்கள் நன்மையே செய்யும், (ஏழரைச் சனி, அஷ்டமச்சனி, ராகு-கேது) தோஷத்தின் தாக்கங்கள் குறையும். ருத்ராட்ஷம் அணிந்திருக்கும் வேலையில் உயிர் பிரிந்தால் சிவபெருமான் திருவடியை அடைந்து நற்கதி எற்படும்.

பேய், பிசாசு, பில்லி, சூனியம், மந்திரம், தந்திரம், இவை அனைத்தும் ருத்ராட்ஷம் அணிந்திருப்பவர்களை ஒன்றுமே செய்யமுடியாது. ஆகையால் ஒவ்வொருவரும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிய வேண்டும்.

ஒருவர் ஏழுஜென்மங்கள் தொடர்ந்து புன்னியம் செய்திருந்தால் மட்டுமே அவர்களுக்கு ருத்ராட்ஷம் அணியும் மஹா பாக்கியம் கிடைக்கும்,.

இத்தனை மேன்மைகள் இருந்தும் சிலர் திருநீறு, ருத்ராட்ஷம் அணியத் தயங்குகிறார்களே?

ருத்ராட்ஷம் அணிபவர்கள் கண்டிப்பாக எந்த சூழ்நிலையிலும், ருத்ராட்ஷதைக் கழற்றவே கூடாது. யார் என்ன சொன்னாலும் அதைப் பொருட்படுத்த வேண்டாம். சிவபெருமானின் அனுக்கிரஹமும், ஆசீர்வாதமும் இருந்தால் மட்டுமே ஒருவருக்கு ருத்ராட்ஷம் கிடைக்கும்.

இத்தனை மேன்மைகள் இருந்தும் இதனைப் படித்துப் பார்த்துத் தெரிந்த பின்பும் மனிதராகப் பிறந்தவர்கள் ருத்ராட்ஷம் அணியவில்லை என்றால் அவர்கள் இப்பிறப்பிற்கே பிரயோஜணமில்லாமல் போய்விடுவார்கள் ஆகையால் கண்டிப்பாக ஒவ்வொருவரும் ருத்ராட்ஷம் அணிய வேண்டும்.

முக்கியகுறிப்பு :

மனநிலை பாதித்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், ஆதரவற்றவர்கள், நோயுற்றவர்கள், பிரார்த்தனை வைப்பவர்கள், கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிய வேண்டும். ஏனெனில் அவர்களை சிவன் தன்கண்போல் காப்பார்.

பத்ம புராணம் கூறவது:

“எவன் ஒருவன் சைவனானாலும், வைஷ்ணவனானாலும், சாக்தனானாலும், காணாபத்யனானாலும், சௌரனானாலும் இறக்கும் தருவாயில் சிரசில் ருத்ராட்ஷத்தை தரித்திருப்பானாகில், எல்லா பாபங்களினின்றும் விடுபட்டு மறு பிறவியில் சகல சுகங்களையும் அனுபவித்து மோக்ஷத்தை கிரமமாய் பெறுவான்”..

பத்ம புராணத்தில் பரமேஸ்வரன் தன் குமாரனாகிய கார்திகேயனுக்கு ருத்ராக்ஷத்தின் மகிமையை வர்ணிக்கிறார். ருத்ராக்ஷத்தைப் பார்ப்பது லக்ஷம் பங்கு புண்ணியாமானால், அதனை அணிவது அதினினும் 10 கோடி பங்கு புண்ணியத்தைப் பயக்கும்.

ருத்ராக்ஷம் தீர்த்தங்களிலும் விசேஷமான தீர்த்தம் என கருதப்படுவதால் அதை அணிந்து கொண்டு செய்யும் பூஜை, ஜபம், தானம், பிதுர்கடன்கள் எல்லாம் நூறு மடங்கு விசேஷ பலனைக் கொடுக்கும். ருத்ராக்ஷத்தால் புனிதமாக்கப்பட்ட நீரை உடலில் தெளித்துக்கொள்ளவேண்டும். ஆகர்ஷண சக்தி பெற்ற இந்த ருத்ராக்ஷம் அணிபவருக்கு அவர்கள் நல்ல மனிதர்களைச் சந்திக்கையில் அவர்களது நல்ல சக்திகளை ஆகர்ஷிக்கும் சக்தி உண்டாகும்.”

லட்சுமிகடாட்சம் அளிக்கும் ருத்ராட்சம்

மனோபலமும் ஆரோக்கியமும் தரும் அரிய பொக்கிஷம் ருத்ராட்சம். இதன் மின்காந்த ஆற்றல் உடம்பில் படும்போது பல நன்மைகள் உண்டாகின்றன.

ரத்த ஓட்டத்தை சீர் செய்யும் சக்தி இதற்குண்டு. ஒன்று முதல் 21 முகங்கள் கொண்ட ருத்ராட்சங்கள் உள்ளன. “”ருத்ராட்சம் அணிபவருக்கு லட்சுமி கடாட்சம் உள்ளிட்ட எல்லாநன்மைகளும் அருள்வேன்,” என்று சிவபுராணத்தில் பார்வதிதேவியிடம் பரமேஸ்வரன் உறுதியளித்துள்ளார்.

இதனை அணிபவர்கள் “நமசிவாய’ என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும். சிவபூஜை, புராணம் படித்தல், கோயில் தரிசனம், தியானம், தேவார, திருவாசகம் ஓதுதல், விரதகாலம், சிரார்த்தவேளை, மங்கல நிகழ்ச்சிகள் ஆகிய வேளைகளில் ருத்ராட்சம் அணிவது சிறப்பானது.

ருத்ராட்சம் அணிவது பற்றி . . . . .

இந்துக்களில் சைவம், வைணவம் என்று கூறுவது போல், கிரகங் களிலும் சைவம், வைணவம் என் றெல்லாம் உண்டு.

சூரியன், சனி, செவ்வாய், குரு ஆகிய வை சிவ கோத்திரம். சனியை இரண் டு பக்கத்திலும் வைக்கலாம்.

செவ்வாய், குரு, சூரியன் ஆகிய மூன் றும் சைவக் கிரகங்கள், சைவக் கட வுள்கள் ஆகும். செவ்வாய் – முருக ன், குரு – தட்சிணாமூர்த்தி, சூரியன் சிவனுக்குரியவர்கள்.

இந்த ஆதிக்கம் உடையவர்கள் எல்லாம் ருத்ராட்சம் அணிந்தால் பிரம்மாண்டமாக முன்னுக்கு வருவார்கள்.

அதிலேயும் ருத்ராட்சத்திலும் ஒன்று முதல் பல முகங்கள் கொண்ட ருத்ராட்சங்கள் உள் ளன. ஆனால் எல்லா முக ருத்ராட்சங்களும் பலன் அளிக்கக்கூடிய ருத்ராட்சங்களே.

அதில் எந்த மாறுபாடும் இல்லை.
ஒவ்வொரு முகத்திற்கும் ஏற்றபடி அதில் மருத்துவ குணங்களும், ஆன்மீக குணங்களும் உள்ளன.

பல்வேறு நூல்கள் இதைப் பற்றிக் கூறுகின்றன.

ருத்ராட்சத்தை எப்படி வேண்டுமானாலும் அணியலாம். ஆனால் ருத்ராட்சத்தை தனியாக அணியாமல் ஏதாவது ஒரு உலோகத்துடன் சேர்த்து அணிந்தால் அது இல்லற வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நல்லது.

அதற்காகத்தான் ருத்ராட்சத்தின் இரு பக்கத்திலும் பூன் போன்று செய்து அதனை நூலில் கட்டித் தொங்க விடுகிறார்கள்.

ஏழரை சனி, அஷ்டமத்து சனி எல்லா ம் வந்தாலே பலர் தானே ருத்ராட்சத் தை விரும்பி அணிவதைப் பார்த்திரு க்கிறேன். ஏழரை சனி, அஷ்டமத்து சனி வந்தால் பழமையானவற்றை விரும்புவார்கள்.

ருத்ராட்சம், யானை தந்தம், யானை முடி மோதிரம் போன்றவற்றை அணிவார்கள்.

மற்றவர்களிடம் இருந்து தன்னை வித்தியாசப்படு த்திக் காட்டுவதற் காக அல்லது அந்தப் பொருளின் மீதுள்ள ஒரு நம்பிக்கையினால் அவ்வாறு செய்வார்கள்.

சனி தசை நடக்கும்போது தன்னம்பிக்கையை விட மற்ற பொருட்க ளின் மீதுதான் நம்பிக்கை அதிகமாக இருக்கும். அதை அணிந்து கொண்டால் அதனால் நமக்கு நன்மை அளிக்கும் என்றெல்லாம் நினைப்பார்கள்.
சனி ராசி உள்ளவர்களும் ருத்ராட்சத்தை விரும்பி அணிவார்கள். மகரம், கும்ப ராசிக்காரர்கள் ருத்ராட்சத்தை விரும்புவார்கள்.

ருத்ராட்சத்தை அணியலாம். அதனால் நல்ல பலன்கள்தான் கிட் டும்.
புதனுடைய அம்சமாக, அதாவது சிவனுடைய அம்சமாக கருதப்படுவது ருத்ராட்சம். சிவனின் அங்கத்திலிருந்து விழக்கூடிய வேர்வை என்றெல்லாம் சில புராணங்கள் சொல்கின்றன.

ஆனால், ருத்ராட்சத்தை தங்கம் அல்லது வெள்ளியில் கட்டி அணியும் போது, மந்த்ரா உபதேசம் பெற்று, குரு நாதர் கையில் இருந்து வாங்கி அணியும் போதெல்லாம் மிகவும் நேமமிஷ்டையுடன் இருக்க வேண்டும். அதாவது தீட்சையாக தரும் ருத்ராட்சத்தை பெற்றுக் கொண்டு தவறான செயல்கள், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடக் கூடாது.

ருத்ராட்சத்திற்கு இயல்பாகவே மருத்துவ குணங்கள் நிறைய உண்டு.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத் தக்கூடிய சக்தியும், மன அழுத்தத்தை குறைக்கும் சக்தியும் ருத்ராட்சத்திற்கு உண்டு. பக்கவாதத்திற்கு முந்தைய காலகட்டத்தில் ருத்ராட்ச மாலையை உடம்பு முழுவதும் தேய்த்துவிடும் போது அது சரியாகிறது.

இன்றைக்கும் தரமான, பழமைவாய்ந்த சித்த வைத்தியர்கள் கால் முடக்கம், கை முடக்கம் இதற்கெல்லாம் மருந்தும் கொடுத்து, ருத்ராட்ச மாலையால் கை, கால்களை உருவி மருத்துவம் அளிக்கும் வழக்கமெல்லாம் இன்றைக்கும் இருக்கிறது.

சீரான இரத்த ஓட்டங்கள், கால் மறத்துப் போகாமல் இருப்பதற்கு போன்றவற்றிற்கும் ருத்ராட்சம் பயன்படும்.

உடலிற்கு ஒரு மினுமினுப்பைக் கொடுக்கும். இதுபோன்ற மருத்துவக் குணங்கள் ருத்ராட்சத்திற்கு உண்டு.

அதனால் யார் வேண்டுமானாலும் அணியலாம்.

ருத்ராட்சம் அணியும் முறை

ருத்ராட்சத்தை அக்குமணி என்றும் குறிப்பிடுவர். சிவத் தொண்டர்களுக்கு அணிகலனாக திகழ்வது ருத்ராட்சம். இதை “கண்டிகை’ என்றும் “தாழ்வடம்’ என்றும் கூறுவர்.

ருத்ராட்சத்தை தரிசித்தால் லட்சம் மடங்கு புண்ணியம். அணிந்தால் நூறு கோடி புண்ணியம். நெல்லிக்காய் அளவுள்ள ருத்ராட்சம் உத்தமம். இலந்தைப் பழ அளவு மத்திமம். கடலை அளவு அதமம்.  புழுக்கள் குடைந்ததும், நசுங்கியதும், நோயுற்றதும் அணியக் கூடாத ருத்ராட்சங்கள். ஒரே அளவு உள்ளதும், உறுதியானதும், பெரியதும் சம முத்துகள் போன்றுள்ளதுமான ருத்ராட்சங்களை பட்டுக்  கயிற்றில் கோர்த்து உடலில் அணிய வேண்டும்.

ருத்ராட்சத்தில் இன்னும் பலவகையானவை உள்ளன. ருத்ராட்சத்தை நூலில் அணிவதாயின் சிவப்பு நிற நூலிலேயே அணிய வேண்டும். அல்லது செம்புக் கம்பியிலோ, தங்கக் கம்பியிலோ, வெள்ளிக் கம்பியிலோ கோர்த்து அணியலாம்.

ஒரு வளர்பிறை திங்கட்கிழமையன்றோ, அவரவரது லக்னாதிபதியின் நாளிலோ காலை நேரத்தில், ஒரு திருக்கோவிலில் பூஜை செய்து அணிய வேண்டும். அதற்கு முன்பாக ஒரு சிவனடியாரிடம் இருந்து வழிமுறைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

சுத்தமாகத் துடைத்துவிட்டு, திருக்கோவிலுக்குச் சென்று அணிந்து கொள்ளலாம். தினமும் அணிவதற்கு முன்பாக நமது இஷ்ட தேவதா மந்திரங்களையோ, தீட்சை தரப்பட்ட மந்திரங்களையோ நிச்சயமாகச் சொல்ல வேண்டும்.

ருத்ராட்சம் எல்லாவித மந்திரங்களுக்கும் ஏற்ற விளைவுகளை நிச்சயம் தர வல்லது. சர்வ மந்திரங்களும் வசியம் ஆகக்கூடிய, சிறந்த காந்த ஈர்ப்பு மண்டலத்தைக் கொண்டது.

1082 ருத்ராட்சம் கொண்ட மாலையை எப்போதும் மார்பில் அணிந்திருப்பவர் அடுத்தடுத்து செய்த அஸ்வமேத  யாகத்தின் பலனை அடைகிறார்.

ருத்ராட்ச மாலையைக் கொண்டு ஜெபித்தால் அதிக பலம், அதிக புண்ணியம். தலையில் அணிந்து குளித்தால் கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும். குறிப்பாக சிவனடியார்களால் போற்றப்படும் ஒரு  முகம், ஐந்து முகம், பதினோறு முகம், பதினான்கு முகம் கொண்ட ருத்ராட்சங்களை அன்போடு பூஜித்து அணிகின்ற மானிடர்கள் தரித்திரம் உடையவராய் இருந்தாலும் எல்லோரையும் விடஅவரே  செல்வம் நிரம்ப உடையவர் ஆகிறார்.தீட்சை பெற்ற பெண்களும் ருத்ராட்சம் அணியலாம். ருத்ராட்ச தரிசனம் பாவத்தைப் போக்கும். தொட்டால் சகல வெற்றிகளையும் கொடுக்கும்.

ருத்ராட்ச மாலையை எப்போது அணியக்கூடாது?

நீராடல், ஊண், உறக்கம், உடலுறவு மற்றும் இயற்கை உபாதை கழிக்கும் போது ருத்ராட்ச மாலைகள் கழுத்தில் இருக்க கூடாது. மேற்சொன்ன விஷயங்களுக்கு பிறகு, உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக்கிக் கொண்டு ருத்ராட்ச மாலையை அணியலாம். பொதுவாக தெய்வ வழிபாட்டின் போது அணிந்து கொண்டு, வழிபாடு முடிந்ததும் கழற்றி பூஜையறையில் பாதுகாப்பது சிறந்த நடைமுறை.

துறவிகள், முனிவர்கள், ரிஷிகள், உலக வாழ்க்கையைத் துறந்தவர்கள், தவத்தில் ஆழ்ந்தவர்கள் ஆகியோர் பின்பற்றும் நடைமுறையை நாம் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை. இன்றைய சமுதாயத்தில் உலக சுகங்களைப் புறக்கணித்து வாழ்வது இயலாது. ஆன்மீகம்-உலக சுகம் இரண்டையும் ஏற்றுக்கொண்டுதான் வாழ இயலும். இத்தகைய சூழலில், பலதரப்பட்ட அலுவல்களை ஏற்க வேண்டியிருப்பதால், ருத்ராட்ச மாலைகளை தெய்வ வழிபாட்டின்போது மட்டும் அணிவது சிறப்பு. அப்போது தான் ருத்ராட்சத்தின் தரம் காப்பாற்றப்படும். காப்பாற்றப்பட்டால் பலன் அளிக்கும். ருத்ராட்ச மாலை மார்பு அல்லது தொப்புள் வரை இருக்க வேண்டும். இதற்கு குறைவாகவோ, கூட்டியோ அணியக்கூடாது.

ருத்ராட்ச மாலையை அணியும் முறை

குடுமியில் அணிய வேண்டியது – 1
தலை உச்சியில் அணிய வேண்டியது – 13
தலையில் அணிய வேண்டியது – 36
காதில் அணிய வேண்டியது 1 அல்லது 6
கழுத்தில் அணிய வேண்டியது – 32
புஜத்தில் (கை 1க்கு) அணிய வேண்டியது – 16
ஒரு மணிக்கட்டில் அணிய வேண்டியது  – 12
குடும்பஸ்தர்கள் அணியும் மாலையில் இருக்க வேண்டியது – 25
இம்மை மறுமை பலன்களை அடைய உதவும் ஜெபமாலையில் (கையில் வைத்துக் கொள்ள) கட்ட வேண்டியது 27,53 அல்லது 108.

ருத்ராட்ச வடிவங்கள்

ருத்ராட்சம் தெய்வீக வடிவம் கொண்டது. அதனால் தான் அதற்கேற்றபடி பலன் கொடுக்கிறது. சிவ புராணத்தில் ருத்ராட்சத்தின் ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு அவதாரம் என குறிப்பிடப்பட்டுள்ளது

ஒரு முகம் – சிவ வடிவம்
இரு முகம் – தேவி வடிவம்
மூன்று முகம் – அக்னி சொரூபம்
நான்கு முகம் – பிரம்ம வடிவம்
ஐந்து முகம் – ருத்ர வடிவம்
ஆறு முகம் – சண்முக வடிவம்
ஏழு முகம் – அன்னங்கள் வடிவம்
எட்டு முகம் – கணபதி வடிவம்
ஒன்பது முகம் – பைரவர் வடிவம்
பத்து முகம் – திருமால் வடிவம்
11 முகம் – ஏகாதச ருத்திர வடிவம்
12 முகம் – துவாதச ஆதித்ய வடிவம்
13 முகம் – முருகன் வடிவம்
14 முகம் – சிவ வடிவம்

ருத்ராட்சையின் பிற பெயர்கள்

ருத்திரமணி, தெய்வமணி, ஜெபமணி, சிவமணி, சிரமணி, அக்குமணி, அக்கமணி, அட்சமணி, விழிமணி, கண்மணி, புனிதமாமணி, கண்டிகை, கண்டி, நாயகன் என ருத்ராட்சைக்கு பல பெயர்கள் உள்ளன.

ருத்ராட்ச சிவலிங்கம்

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், பாபநாச நாதர் கோயிலில் உள்ள மூலவர் ருத்ராட்சத்தினால் ஆனவர். பொதிகை மலை அடிவாரத்திலுள்ள இந்தக் கோயிலின் மூலவரே, உலகின் முதல் சிவலிங்கம் என தல புராணம் கூறுகிறது. பங்குனி 22 முதல் சித்திரை முதல் தேதி வரை இங்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. இமயத்தில் சிவபார்வதிக்கு நடந்த திருமணத்தை பொதிகையில் அகத்தியர் கண்டார். அந்த நிகழ்ச்சி சித்திரை முதல் நாளில் இங்கு நடத்தப்படும்.

ருத்ராட்சத்தால் ஆன அம்மன்

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகில் அமைந்துள்ள திருத்தலம் சோட்டாணிக்கரை. இங்குள்ள கோயிலில் அருள்பாலிக்கும் ராஜராஜேஸ்வரி அம்மனை சோட்டாணிக்கரை பகவதி என்று அழைக்கிறார்கள். இந்த அம்மன் முழுவதும் ருத்ராட்சத்தால் ஆனது என்பது தனி சிறப்பு. இவள் காலை, மதியம், மாலை மூன்று வேளையும் துர்க்கா, லட்சுமி, சரஸ்வதியாக அருள்பாலிக்கிறாள். தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள், மனநிலை சரியில்லாதவர்கள் இங்கு வழிபாடு செய்து குணமடைகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக