சனி, 25 மார்ச், 2017

கவிதை

காற்றாய் இருந்துவிடு
உன்னை யாரும்
தடுக்க முடியாது!

கடலாய் இருந்துவிடு
உன்னை யாரும்
அளக்க முடியாது!

மழையாய் இருந்துவிடு
உன்னை யாரும்
மறுக்க முடியாது!

மலையாய் இருந்துவிடு
உன்னை யாரும்
மறைக்க முடியாது!

ஒளியாய் இருந்துவிடு
உன்னை யாரும்
பிடிக்க முடியாது!

கடின உழைப்போடு நீ
என்றுமே இருந்துவிடு..
உன் வெற்றியை
யாரும் தடுக்க முடியாது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக