வெள்ளி, 24 மார்ச், 2017

ஒரு 2 நிமிடம் ஒதுக்கி இதை படித்து பாருங்கள்…….. ஆன்மாவிற்கு ஒரு மருந்தகம்”.அத்தியாயம் - 5 பகுதி-2- கறை படியாத கண்கள்.

நீங்கள் பார்ப்பதுதான் உங்கள் உலகத்தை தீர்மானிக்கிறது. நாம் ஒரே உலகத்தில் வாழ்வதில்லை. காரணம் நாம் பார்க்கிற விதங்கள் வித்தியாசமானவை. மக்கள் பல விதமாக இருப்பதை போலவே பலவிதமான உலகம் இருக்கிறது. அதனால்தான் மோதல். அதனால்தான் காதலில், நட்பில், முரண்பாடு – காரணம் இரண்டுவிதமான பார்வைகள் ஒத்துப்போகாது. அவை முட்டி, மோதிக்கொள்கிறது. அவை ஒருவரையொருவர் மாற்ற முயல்கிறது, ஒருவர் மீது ஒருவர் ஆளுமை செய்யச் செய்கிறது. உள்ளே பார்த்தால், இருவரும் வெவ்வேறு விதமாக காண்பதுதான் காரணம், யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதற்கு, யாருடைய கண்கள் சரியானது, என்பதை நிரூபிக்க ஒரு பெரிய சண்டையே நடக்கிறது.
.
நீங்கள் உள்ளே பார்த்தால், ஒரு மூன்றாவது கண் இருக்கிறது. உங்கள் இரண்டு கண்களும் உங்கள் ஆழத்தில் ஒரு இடத்தில் சந்தித்து கொள்கின்றன. அவைகள் வெளியே சந்திப்பதில்லை – அவைகளால் அங்கே சந்திக்க முடியாது. நீங்கள் தொலைதூரத்தை பார்த்தால், அதற்கு அப்பால் அவை இருக்கின்றன; நீங்கள் நெருங்கி வந்தால், அவைகள் நெருங்கி வரும். நீங்கள் உங்கள் கண்களை மூடும்போது, அவைகள் ஒன்றாகிவிடுகின்றன, அந்த ஒரு கண் யதார்த்தத்தை அப்படியே பார்க்கும். அது பார்க்காமல் பார்ப்பது, எந்த தளமுமில்லாமல் பார்ப்பது. அது கறை படியாத பார்வை. வானவில்லின் ஏழுநிறங்களும் ஒன்றாகி வெள்ளையாகி விட்டன.
.
அழகான கண்கள் உடையவர்களாக இருப்பதில் மக்களுக்கு ஆர்வம். அதைவிட விஷயங்களை பார்க்க அழகான வழிகள்மீது ஆர்வமாக இருக்கவேண்டும்.. அழகான கண்கள் இருப்பதைவிட, அழகான பார்வை வேண்டும். அழகாக பாருங்கள். பிரிக்கப்படாத, எல்லையற்ற ஒன்றை மட்டும் பாருங்கள்.. `அழகாக பாருங்கள்’ என்று அதைத்தான் ��

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக