'பிளஸ் 2 கணிதம் மற்றும் விலங்கி யல் தேர்வு வினாத்தாள்கள் நேற்று ஓரளவு கடினமாக இருந்தன. மாண வர்கள் பெறும் கட் ஆப் மதிப்பெண் குறையும்” என, ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.
கணிதத் தேர்வு குறித்து, தூத்துக்குடி எம்.தங்கம்மாள்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை கணித ஆசிரியர் ஞா.சேகர் கூறியதாவது:
பிளஸ் 2 கணிதத் தேர்வில் ஒரு மதிப்பெண் கேள்விகள் 40, ஆறு மதிப்பெண் கேள்விகள் 10, பத்து மதிப்பெண் கேள்விகள்10 கேட்கப்படும். நேற்று நடந்த தேர்வில் ஒரு மதிப்பெண் கேள்வி கள் மிகவும் எளிதாக இருந்தன. புத்தகத்தின் பின் பகுதியிலிருந்து 30 கேள்விகளும், பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் வெளியிடப் பட்ட வினாத் தொகுப்பிலிருந்து 10 கேள்விகளும் கேட்கப்பட்டி ருந்தன.வழக்கமாக கேட்கப்படும் கேள்விகள் என்பதால், இவற்றுக்கு மாணவர்கள் எளிதாக பதிலளித்திருப்பார்கள். இதேபோல் 10 மதிப்பெண் கேள்விகளும் மிகவும் எளி தாகவே இருந்தன. 14 கேள்வி கள் கொடுக்கப்பட்டு, 9 கேள்வி களுக்கு பதில் எழுதுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் 69-வது கேள்வி மட்டும் சற்று கடினமாக இருந்தது. யோசித்து எழுதினால் தான் இதற்கு சரியான விடையை கண்டுபிடிக்க முடியும்.கடினமான வினாக்கள்கட்டாயம் பதில் எழுத வேண்டிய கடைசி வினா எளிதாக இருந்ததால், சாதாரண மாணவர்களும் சரியாக எழுதியிருப்பார்கள். எனவே, 10 மதிப்பெண்களுக்கான கேள்வி யில் மாணவர்கள் அதிக எண் ணிக்கையில் முழு மதிப்பெண் பெற வாய்ப்புள்ளது.6 மதிப்பெண் வினாக்களில் சில சற்று கடினமாக இருந்தன. வழக் கமாக கேட்கப்படாத, முக்கியத் துவம் இல்லை என ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த பகுதியிலிருந் தும் வினாக்கள் வந்திருந்தன. சுமாராகப் படிக்கும் மாணவர்கள் சற்று திணறியிருப்பார்கள்.எனவே, முழு மதிப்பெண்கள் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. அதேநேரம், பலரும் 120 மதிப்பெண்களை எளிதில் எடுக்க முடியும்” என்றார் அவர்.
விலங்கியல்
விலங்கியல் தேர்வு குறித்து, கன்னியாகுமரி மாவட்டம் மேல்பாலை புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் பி.எஸ்.ஜோசப் சேவியர் கூறியதாவது:விலங்கியல் தேர்வில் 10 மற்றும் 5 மதிப்பெண்களுக்கான வினாக்கள் எளிமையாகவே இருந்தன. 3 மதிப்பெண் வினாக்கள் சராசரி மாணவர்களுக்கு சற்று சிரமம் அளிக்கும் வகையில் இருந்தன. 1 மதிப்பெண்ணுக்கான 30 வினாக்களில் வினா தொகுப்பிலிருந்து 17 கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டிருந்தன. தெளிவாக அனைத்து பாடங்களையும் படித்திருந்தால் மட்டுமே விடை அளித்திருக்க முடியும். 10 மதிப்பெண்களுக்கான வினாக்கள் 6-வது பாடத்திலிருந்துகேட்பதற்கு பதில், 5-வது பாடத்திலிருந்து கேட்கப்பட்டிருந்தன.
தற்போதைய சூழலை மையமாகக் கொண்டு, கழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து 10 மதிப்பெண் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. இதனால் விலங்கியலில் தேர்ச்சி விகிதம் குறையாது. அதே நேரம் கட் ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக