சனி, 25 மார்ச், 2017

ஆதார் எண்ணுடன் பான் கார்டு இணைக்க வேண்டும்.. மத்திய அரசின் அடுத்த அதிரடி !!

பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயம், மத்திய அரசின் அடுத்த செக்..!

ஜூலை 1 முதல் வருமான வரி தாக்கல் செய்யக் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆதார் அட்டையை உடன் நிரந்தரக் கணக்கு எண்ணான பான் எண்ணையும் இணைக்க வேண்டும். இல்லை என்றால் டிசம்பர் 31-ம் தேதிக்குப் பிறகு உங்கள் பான் கார்டு செல்லாது.
 நிதி மசோதா திருத்தங்களின் படி வரி செலுத்துனர்கள் பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. யாரெல்லாம் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லையோ அவர்களது பான் கார்டுகள் காலக்கெடு முடிந்த பிறகு செல்லாது. பான் கார்டு வரி செலுத்தும் அனைவருக்கும் பான் கட்டாயம், வரி செலுத்தும் வரம்பில் இல்லாதவர்களும் பான் கார்டை அடையாள அட்டையாகப் பயன்படுத்தலாம்.

 மானியம் என்றாலே ஆதார் கட்டாயம் கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு அனைத்துத் திட்டங்களுக்கும் அதார் எண் தேவை என்பதைக் கொண்டு வருகின்றது, முக்கியமாக மானியம் பெறும் அனைத்துத் திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

பள்ளி சத்துணவு சாப்பாட்டிற்கும் ஆதார் அன்மையில் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் பள்ளிக் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் மதிய உணவிற்கும் ஆதார் எண் கட்டாயம் என்று கூறியுள்ளது.

ரயில்வே பாஸ் மத்திய அரசைப் பொருத்த வரை இன்னும் ரயில்வே ஊழியர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வரும் பாஸ்களுக்கு அதார் எண் கட்டாயம் ஆக்கப்படவில்லை.

 இந்தியர்களின் வருமானத்தைக் கண்டறிவது எளிது ஆதார் கார்டு, பாண் கார்டு மற்றும் வங்கி கணக்குகளுடன் இணைக்கப்படுவதினால் கோடி கணக்கான இந்தியர்களின் வருமானம் மற்றும் செலுத்த வேண்டிய வரி விவரங்களை வருமான வரித்துறையினரால் எளிதாகக் கண்டறிய முடியும்.

மாற்று அடையாள அட்டை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வருங்காலத்தில் பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற அனைத்து அடையாள அட்டைகளுக்கும் ஆதார் அட்டை மாற்றாக இருக்கும் என்று வருமான வரிக்கு ஆதார் எண் கண்டிப்பாகத் தேவை என்று அறிவிக்கும் போது கூறினார்.

எதனால் பான் கார்டுக்கு ஆதார் கட்டாயம் மேலும் ஆதார் அட்டையைப் பான் கார்டுன் இணைக்கும் போது ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு வைத்துள்ள விவரங்கள் கிடைக்கும் என்றும் அதன் மூலம் வருமான வரிச் செலுத்துவதில் ஏற்படும் முறைகேடுகளைக் குறைக்கலாம் என்றும் அருன் ஜெட்லி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக