ஒரு சமுதாயமாக வாழும் முறைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு, தேனீக்களின் வாழ்க்கை முறைதான்.ஒரு தேனீ கூட்டத்தில் ஒரே ஒரு ராணித் தேனீ மட்டுமே இருக்கும்.மற்றவை ஆண் தேனீக்கள், வேலைக்கார தேனீக்கள்.இதில் இனப்பெருக்கம் செய்வது மட்டுமே ராணித் தேனீயின் பணிஆண் தேனீயின் வேலை பற்றி சொல்ல வேண்டியதில்லை.இதில் வேலைக்காரத் தேனீக்கள் தான் தேன்கூட்டிற்கு முழுமுதல் பொறுப்பு.
இந்த தேனீக்கள் கூட்டத்தால் தான், அது தேனைச் சேகரிக்கும் பொழுது அதன் கால்களில் ஓட்டிச் செல்லும் மகரந்த சூல்களால் தான் தாவரங்கள்,மரங்கள்,காடுகளே உருவாகின்றன.
இவ்வளவு பயன் உள்ள தேனீக்கள் சமீபகாலமாக வெகு வேகமாக அழிந்து வருகின்றன.ஐரோப்பாவில் 42% தேனீக்கள் அழிந்து விட்டன.காரணம்-மலட்டுத் தன்மை கொண்ட பூக்கள்.அவற்றை நல்ல பூக்கள் என்று நம்பி தேனெடுக்க வரும் தேனீக்கள் அமர்கின்றன.
அப்பூக்களில் உள்ள Neonicotinoids- நீயோ நிகோட்டினாய்ட்ஸ் என்னும் ஒரு வேதிப் பொருள், தேனீக்களின் நரம்பு மண்டலத்தில் பாதிப்பை உண்டாக்கி,அதனால் இயற்கையிலேயே மிகப் புத்திசாலியானதும்,நல்ல ஞாபகதன்மைக் கொண்டதுமான தேனீக்கள் தங்கள் கூட்டை மறந்து--குழம்பி இறந்து விடுகின்றன.இவற்றை நம்பி கூட்டில் காத்திருக்கும் ராணித் தேனீ--இறுதியில் தானும் இறக்கிறது.அதோடு அந்த சமுதாயமே அழிகிறது.
இந்தப் பேரழிவிற்கு முழுமுதல் காரணம்: மரபணு மாற்றப் பட்ட விதைகள்.அவையே மலட்டுத் தன்மை கொண்ட பூக்களை உரிவாக்குகின்றன.வான் பொய்த்ததால், வாழ்வு பொய்த்த விவசாயியின் வாழ்வில்,குறுகிய காலத்தில் நல்ல மகசூல் என்ற பெயரில், மரபணு மாற்றப்பட்ட B.T கத்திரிக்காய்களும், வாழைப்பழங்களும்,மாம்பழங்களும்- Monsanto மான்சான்ட்டோ எனப்படும் மரபணு மாற்றப் பற்ற விதைகளும் இந்திய விவசாய சந்தைகளுக்குள் ஊடுருவத் துவங்கியுள்ளன.
இவற்றை ஆரம்ப நிலையிலேயே, வேரோடும்--வேரடி மண்ணோடும் விரட்டியடிக்க வேண்டியது நம் பொறுப்பு.ஏனெனில் நன்றாக நினைவில் கொள்ளுங்கள்,
மனிதனின் துணையின்றி தேனீக்கள் எத்தனை ஆயிரம் வருடங்கள் வேண்டுமானாலும் உயிர் வாழ்ந்து விடும்.ஆனால் தேனீக்கள் இல்லையேல் மனித இனம் நான்கே ஆண்டுகளில் துடைத்தெறியப்பட்டு விடும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக