''சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும்; மாணவர்கள், பெற்றோர் கவலை அடைய வேண்டாம்,'' என, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
சி.பி.எஸ்.இ.,
எனப்படும் மத்திய இடை நிலை கல்வி வாரியத்தின் சார்பில் நடத்தப்பட்ட, பிளஸ்
2 தேர்வு முடிவுகள் வெளியாவதில் குழப்பம் நீடிக்கிறது. மதிப்பெண் வழங்கும்
முறையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், தேர்வு முடிவுகள்வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்வெளியானது.
இந்நிலையில், ''இது போன்ற தகவல்களால், மாணவர்கள் அதிர்ச்சி அடைய வேண்டாம்,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில், ''இது போன்ற தகவல்களால், மாணவர்கள் அதிர்ச்சி அடைய வேண்டாம்,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து, பிரகாஷ் ஜாவடேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடும் பணி, தீவிர கதியில் நடந்து வருகிறது. திட்டமிட்டபடி, சரியான நேரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும்; அதில் எவ்வித தாமதமும் ஏற்படாது. தேர்வு முடிவுகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும். இது குறித்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர் கவலை அடைய வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக