தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 12-ந்தேதியும், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 19-ந்தேதியும் வெளியாயின.
கோடை விடுமுறை முடிந்து வருகிற ஜூன் 1-ந்தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுவதாக இருந்தது.
ஆனால் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் பள்ளிக்கூடங்களை ஏற்கனவே முடிவு செய்த தேதியில் திறப்பதா? அல்லது தள்ளிவைப்பதா? என்று தமிழக அரசு ஆலோசனை நடத்தி வந்தது.
பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு
இந்த நிலையில், பள்ளிகள் திறப்பு ஒரு வாரம் தள்ளிவைக்கப்படுவதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து தமிழக அரசின் சார்பில் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பினருடன் (‘அய்மா’) நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் நடந்த இந்த கூட்டத்தை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கிவைத்தார்.
கூட்டம் முடிந்ததும் நிருபர்கள் அவரை சந்தித்து, “தமிழகத்தில் தற்போது கோடை வெயில் கொளுத்துவதால் பள்ளிகள் திறக்கப்படும் தேதி தள்ளி வைக்கப்படுமா?” என்று கேட்டனர்.
ஜூன் 7-ந்தேதி திறக்கப்படும்
அதற்கு செங்கோட்டையன் பதில் அளிக்கையில், “கடும் வெயிலின் காரணமாக, முதல்-அமைச்சரின் அனுமதியை பெற்று தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 7-ந்தேதி திறக்கப்படும்” என்றார். மேலும், பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவர்களுக்கு புத்தகம் மற்றும் அரசு பேருந்துகளில் பயணிக்க இலவச பயண அட்டை வழங்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசுகையில் கூறியதாவது:-
பள்ளிகளில் கழிப்பிடம்
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கழிப்பிடம் இல்லாத பள்ளிகள் இல்லை என்ற நிலை ஏற்பட வேண்டும். மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். முதல் கட்டமாக இந்த பணிகள் அம்பத்தூரில் தொடங்கி உள்ளது. பின்னர் தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும்.
தமிழகத்தில் மொத்தம் 36 ஆயிரம் பள்ளிகள் உள்ளன. இதில் 90 சதவீத பள்ளிகளில் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு உள்ளன. கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் நவீன கழிப்பிட வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
கல்வியில் புரட்சி
கல்வியை அழித்தால் நாட்டை அழித்து விடலாம். தமிழகத்தில் முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். அது கல்வியில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு கல்வியில் பெரிய புரட்சியை ஏற்படுத்தியவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா.
எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு தமிழகத்தில் கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு மட்டும் ரூ.12 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆண்டுக்கு ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக