செவ்வாய், 5 செப்டம்பர், 2017

பி.டி.எஸ்., காலியிடங்களுக்கு இன்று நடக்குது, 'கவுன்சிலிங்'.

சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், பி.டி.எஸ்., எனப்படும், பல் மருத்துவ படிப்பில், 1,122 இடங்கள் காலியாக உள்ளன. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, இன்று கவுன்சிலிங் நடக்கிறது.தமிழகத்தில், 'நீட்' தேர்வு அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

அரசு, சுயநிதி கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., இடங்கள் அனைத்தும் நிரம்பி, வகுப்புகள் நேற்று துவங்கி விட்டன. அரசு ஒதுக்கீட்டில் உள்ள, பி.டி.எஸ்., இடங்களுக்கு, நேற்று நடந்த கவுன்சிலிங்கில், 15 இடங்கள் நிரம்பின. இதனால், மொத்தமுள்ள, 1,045 பி.டி.எஸ்., இடங்களில், 604 இடங்கள் நிரம்பி உள்ளன; 441 இடங்கள் காலியாக உள்ளன.

சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள, 715 பி.டி.எஸ்., இடங்களில், 34 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன; 681 இடங்கள் காலியாக உள்ளன. இதையும் சேர்த்தால், அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில், 1,122 பி.டி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன. இன்று, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும், நாளை, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் கவுன்சிலிங் நடைபெறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக