பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அரசு செயலாளர் டாக்டர் சீ.ஸ்வர்ணா, தமிழக அரசின் அனைத்து துறை செயலாளர்கள், அனைத்து தலைமைசெயலக துறைகள், அனைத்து துறைத் தலைவர்கள், மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட நீதிபதிகள், குற்றவியல் தலைமை நீதிபதிகள், அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் உள்ளிட்டோருக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:–
பொதுப்பணிகள், அரசு பணியாளர்கள் அனைவரும் அலுவலகத்தில் பணியாற்றும் நேரங்களில் போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை அணிந்து பணியாற்றுவதில்லை என்பது தொடர்பான புகார்கள் அரசுக்கு வந்துகொண்டு இருக்கிறது. எனவே அரசு பணியாளர்கள் அனைவரும் அலுவலகங்களில் பணியாற்றும் நேரங்களில் அவர்களது போட்டோவுடன் கூடிய அடையாள அட்டையை தவறாமல் அணிய வேண்டும்.
அடையாள அட்டையில் பணியாளர் பெயர் மற்றும் பதவி ஆகியவை குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும். அவை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒன்றின் கீழ் ஒன்று இடம்பெறுமாறு இருக்க வேண்டும்.
அறிவுரை வழங்க...
எனவே அரசு அலுவலகங்களில் பணியாற்றும் துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் தங்கள் கீழ் உள்ள சார்நிலை அலுவலகங்களுக்கு இதுகுறித்து உரிய அறிவுரை வழங்க வேண்டும்.
அத்துடன் அனைத்து பணியாளர்களுக்கும் அவர்களுடைய போட்டோவுடன் கூடிய அடையாள அட்டையை வழங்க வேண்டும். இதனை முறையாக அணைத்து பணியாளர்களும் அணியவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக