செவ்வாய், 19 செப்டம்பர், 2017

வங்கியில் ஆதார் எண் இணைக்காவிடில் ஜனவரி முதல் பணபரிவர்த்தனைகள் நிறுத்தம்.

வங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்காதவர்களின் பரிவர்த்தனைகள் ஜனவரி முதல் நிறுத்தப்பட உள்ளது. 12 வங்கிகளில் ஆதார் போட்டோ எடுக்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் தங்களது வங்கி கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என, மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. 

டிச., 31ம்தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் ஆதார் எண்ணை இணைக்காவிடில், வரும் 2018, ஜனவரி முதல் வாடிக்கையாளர்களின் கணக்குகளில் பரிவர்த்தனை நிறுத்தப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் 85 சதவீத வாடிக்கையாளர்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

இன்னும் 15 சதவீதம் பேர் இணைக்க வேண்டியுள்ளது.வங்கிகளில் ஆதார் மையம்: வாடிக்கையாளர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆதார் போட்டோ எடுப்பதற்காக வங்கிகளில் முதல் கட்டமாக 12 ஆதார் மையங்கள் அமைக்கப்பட உள்ளது.

திண்டுக்கல், வத்தலக்குண்டு, கொடைக்கானல், பழநி, நத்தம், ஆத்துார் ஆகிய ஊர்களில் உள்ள கனரா வங்கிகளிலும், திண்டுக்கல், பழநி, வத்தலக்குண்டு, வேடசந்துார், நத்தம் பகுதிகளில் ஐ.ஓ.பி., வங்கி கிளைகளிலும், ஓட்டன்சத்திரம் பெடரல் வங்கிக் கிளையிலும் ஆதார் மையங்கள் அமைக்கப்படுகிறது. இங்கு வாடிக்கையாளர்கள் குடும்பத்தினரும் ஆதார் அடையாள அட்டை பெற போட்டோ எடுக்கலாம் என, மாவட்ட முன்னோடி கனரா வங்கி மண்டல மேலாளர் சந்திரசேகரன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக