வெள்ளி, 22 செப்டம்பர், 2017

ஆன்லைனில் ஆசிரியர் தேர்வு-தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.

சென்னை பல்கலை.,யில் ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், முதல் முறையாக ஆன்லைனில் ஆசிரியர் தேர்வு நடந்துள்ளது. ஆசிரியர் தேர்வு வெளிப்படை தன்மையுடன் நடந்துள்ளது. 


முன்பு 7 மாதங்கள் கழித்து அறிவிக்கப்பட்ட தேர்வு முடிவுகள், தற்போது 40 நாட்களிலேயே அறிவிக்கப்பட்டுள்ளது. 2315 முதுநிலை ஆசிரியர்களுக்கும், 58 சிறப்பு ஆசிரியர்களுக்கும் பணிநியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். அதுவரை ரூ.7500 ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வகுப்புக்கள் நடத்தப்படும். இனி வரும் காலங்களில் மத்திய அரசின் எந்த போட்டி தேர்வையும் எதிர்கொள்ளும் அளவிற்கு தமிழக மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக