சனி, 23 செப்டம்பர், 2017

ப்ளிப்கார்ட் Vs அமேசான் - Offers! எது best ?

இரண்டிலும் சிறந்த ஆபர்கள் எவை, தாமதிக்காமல் வாங்க வேண்டிய பொருட்கள் எவை என்பது பற்றிய ஒரு அலசல்...

டி.வி, பவர்பேங்க், ஹார்ட் டிஸ்க்... அசத்தும் ஆன்லைன் ஆஃபர்கள்... எதை வாங்கலாம்?

“போனா வராது... பொழுது போனா கிடைக்காது" என்ற அளவுக்கு போட்டிப் போட்டு ஆஃபர்களை அள்ளிக்கொடுத்து கொண்டிருக்கின்றன ஃப்ளிப்கார்ட்டும், ஸ்னாப்டீலும், அமேசானும். இவ்வளவு விலை குறைப்பு சாத்தியமா என ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்ஸ். 
வீட்டு உபயோகப்பொருட்கள் முதல் எலக்ட்ரானிக் பொருட்கள், ஸ்மார்ட்போன்கள் என அனைத்தும் விலை குறைக்கப்பட்டிருக்கின்றன. அமேசான் ஒரு படி மேலே போய், HDFC கிரெடிட் கார்டுகள் மூலமாக இப்பொழுது வாங்கும் பொருளுக்கு அடுத்த வருடம் ஜனவரியில் பணம் செலுத்தினால் போதும் என அறிவித்திருக்கிறது.
ஃப்ளிப்கார்ட்டில் எஸ்பிஐ கார்டுகளுக்கும் PhonePe மூலமாக வாங்கும் பொருட்களுக்கு 10 % கேஷ் பேக் ஆபர் உண்டு. அமேசானும் HDFC கார்டுகள்  மூலமாகவும் அமேசான் பே மூலமாகவும் வாங்கும் பொருட்களுக்கு 10 % கேஷ் பேக் ஆபர் தருகிறது. ஃப்ளிப்கார்ட்டும் அமேசான் இரண்டிலும் 24 ம் தேதி வரை இந்த ஆபர்கள்  கிடைக்கும். ஸ்னாப்டீல் சேல் 25 அம் தேதி வரை தொடரும்.
ஃப்ளிப்கார்ட் அமேசான் இரண்டிலும் சிறந்த ஆபர்கள் எவை, தாமதிக்காமல் வாங்க வேண்டிய  பொருட்கள் எவை என்பது பற்றிய ஒரு அலசல். கீழே உள்ள பொருட்கள் மட்டுமில்லாமல் பெரும்பாலான பொருட்கள் இரண்டு இனையதளங்களிலும் ஒரே விலைக்கே கிடைக்கின்றன. 
டிவி
டிவியை பொறுத்தவரை Vu நிறுவனம் சிறந்த ஆபர்களை அளிக்கிறது. 50 இன்ச் FHD LED டிவி 29,999 ரூபாய். 32 இன்ச் FHD LED டிவி  15,499 ரூபாய். 55 இன்ச் UltraHD (4K) டிவி 49,999 ரூபாய். 
சாம்சங் 24 இன்ச்  HD LED டிவி  11,499 ரூபாய். 32  இன்ச் HD LED டிவி 17,999 ரூபாய் இது மட்டுமில்லாமல் பல்வேறு  டிவி மாடல்களுக்கும் விலை குறைப்பு உட்பட No Cost EMI வசதியும் ஃப்ளிப்கார்ட்டில் இருக்கிறது.
அமேசானில் TCL 49 இன்ச்  FHD SMART LED டிவி 28,999 ரூபாய். 65 இன்ச் FHD LED டிவி 94,990 ரூபாய். 
லேப்டாப்
ஆப்பிள் ரசிகர்களுக்கு நிச்சயம் இது நல்ல செய்திதான். 8 GB/128 GB SSD மேக் புக் ஏர் ஆபர்  விலையில் 49,990 ரூபாய்க்கு  கிடைக்கிறது.
15.6 இன்ச் 4 ஜிபி ரேம், 1TB  HP 15-be016TU லேப்டாப்  22,990 ரூபாய்க்கு கிடைக்கிறது.
ஹார்டு டிஸ்க்
Adata HV620 1TB  ஹார்டு டிஸ்க்குகள் 3000 ரூபாய்க்கு கிடைக்கிறது.
அது போல 2TB  ஹார்டு டிஸ்க்குகள் 4800 விலையில் இருந்து  தொடங்குகின்றன.
Snapdeal
பவர் பேங்க் 
ஜியோமியின் Mi 10000 mAh பவர் பேங்க்  1,199 ரூபாயிலிருந்து 300  ரூபாய் விலை குறைந்து  899 க்கு கிடைக்கிறது.
20000 mAh  Mi பவர் பேங்க் விலை 1,799 ரூபாய் .
கேமரா 
அமேசான் இணையதளத்தில் Canon EOS 1300D சிங்கள் லென்சோடு சேர்த்து 20,990 ரூபாய்க்கு கிடைக்கிறது.
அதே போல Action camera க்களில்  YI 6,990 ரூபாய்.
மொபைல்கள்
புதுசா ஒரு  மொபைல் வாங்கணும்னு காத்திருந்தவங்களுக்கு இதுதான் சரியான நேரம். ஆப்பிள் முதல் ஜியோமி வரை அனைத்துக்கும் ஆபர் இருக்கிறது.
ஐபோன் 7 மொபைல் 38,999 ரூபாய் மற்றும் ஐபோன் 6 - 20,999 ரூபாய்  இரண்டு இனையதளங்களிலும் ஒரே விலையில் கிடைக்கிறன.
மீடியம் பட்ஜெட் மொபைல்களில் அனைவரின்  சாய்ஸாக இருப்பது  ரெட்மி நோட் 4 தான். அதன்  4 ஜிபி ரேம் 64  இன்டர்னல் மெமரி  மாடல் இதுவரை 12,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்பொழுது இரண்டாயிரம் விலை குறைந்து 10,999 ரூபாய்க்கு ஃப்ளிப்கார்ட்டில் கிடைக்கும்.
லெனோவோ K8 பிளஸ் டூயல் கேமரா ஸ்மார்ட்போன் 10,999 ரூபாய்க்கு வெளியானது. அது தற்பொழுது 8,999 ரூபாய். 64 ஜிபி இன்டர்னல் மெமரி 3 ஜிபி ரேம் Samsung Galaxy On Nxt  ஐயாயிரம் ரூபாய் விலை குறைக்கப்பட்டு 12,900 க்கு கிடைக்கிறது. ஒன்பிளஸ், மோட்டோரோலா மட்டுமில்லாமல் அனைத்து மொபைல் மாடல்களும் விலை குறைத்திருக்கின்றன. அதில் பெரும்பாலனவற்றிற்கு எக்சேஞ்ச் ஆஃபரும் உண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக