ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

Departmental Exam - தேர்வுகளுக்கு அக்., 31 வரை அவகாசம்.

         புதிதாக மாற்றப்பட்ட பாடத்திட்டத்தில், டிசம்பரில் நடத்தப்பட உள்ள, அரசு துறைத்தேர்வுகளுக்கு, 'ஆன் - லைன்' மூலம் விண்ணப்பிக்கலாம். 


தமிழகத்தில், அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் என, பல லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இவர்கள், சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகளுக்கு, இரண்டு, அரசு துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம்.

ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படும், இத்துறை தேர்வுகளுக்கான பாடத்திட்ட முறை மாற்றப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில், டிச., 23 - 31 வரை, அரசு துறைத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

இதற்கு விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு, நேற்று துவங்கி உள்ளது. தேர்வெழுத விரும்பும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், டி.என்.பி.எஸ்.சி., இணையதளம் மூலம், ஆன் - லைனில் விண்ணப்பிக்கலாம். அக்., 31 வரை, விண்ணப்பிக்க காலக்கெடு வழங்கப்பட்டு உள்ளது. டிச., 17 முதல், 'ஹால்டிக்கெட்'டுகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக