சனி, 16 செப்டம்பர், 2017

பொறியியலாளர் ரித்துராஜ் சஹானி 1997ம் வருடம் அமெரிக்காவில் குடியேறியவர்...

மும்பை அந்தேரியில்
10-வது மாடியில் இவருடைய வயதான பெற்றோர் வசித்து வந்தனர்.

தந்தை 2013ல் காலமானார். அதன்பின் தாயார் மட்டும் தனியாக பிளாட்டில் வசித்தார்.

ஏப்ரல் 2016ல் ரித்துராஜ் கடைசியாக தாயாரிடம் போனில் பேசியுள்ளார்.

நேற்று காலை இந்தியா வந்த அவர் அப்பார்ட்மெண்டில் வசிக்கும் தாயை காண சென்றார்.


தாயார் கதவை திறக்காததால், பூட்டு ரிப்பேர் செய்பவர் உதவியுடன் வீட்டை திறந்து பார்க்கிறார்.

கட்டிலில் தாயார் படுத்துகிடந்தார்..
எலும்பு கூடுகளாக..

தகவலறிந்து வந்த காவல்துறையினர் ஆய்வுசெய்து
இறந்து பல வாரங்கள்  ஆகியிருக்கும் என்றனர் ....!

நிற்க....
இந்த பொறியிலளர்  கடைசியாக தனது தாயாரிடம் பேசியது கடந்த வருடம் ஏப்ரல் மாதம் (2016)
இந்தியா வந்தது ஆகஸ்டு 2017 இடைபட்ட
16 மாதங்களாக தனியாக வசித்துவந்த தாய்க்கு போன் செய்யகூட நேரமில்லாமல் பண வேட்டையா..? அல்லது மனைவியின் தடையா?
இத்தனை வருடங்களாக பணம் சேர்க்க தெரிந்த இவர் கொஞ்சம் நண்பர்களை சேர்த்திருந்தாலோ அல்லது உறவினர்களை பேணியிருந்தாலோ வயதான தாயை மாதமொருமுறையாவது காண வந்துசென்றிருப்பார்கள்
அப்படி சேரத்த பணத்தில் சில செலவழித்திருந்தால் கூட தாயை பார்த்துகொள்ள பணியாள் அமர்த்தி இருக்கலாம்...
இறந்த உடல் எலும்புகூடுகளாக மாறும்வரை பிணவாடை கூட உணராத அப்பார்ட்மென்ட்வாசிகள் மத்தியில் பெற்றோர்களை வீசி சென்றதற்குபதிலாக தாயை முதியோர் இல்லத்திலோ அல்லது அநாதை ஆசிரமத்திலோ கூட விட்டுசென்றிருக்கலாம்.

இனி என்ன சேர்த்த பணத்தைகொண்டு தாயின் எலும்புக்கூட்டிற்கு இறுதிச்சடங்கு செய்துவிட்டு அந்த அஸ்தியை புண்ணியநதியில் கரைத்துவிடடால் போதும் தாயின் ஆத்மா சாந்தி அடைந்து மகன் மேன்மேலும் பணம் சேர்க்க ஆசிர்வதிப்பார்
தனது மகனை என்ஞினியர் ஆக்க தெரிந்த பெற்றோருக்கு மனிதனாக்க தெரியவில்லை

😂😂😂😂😂😂😂😂
இந்தியாவில்
அப்பார்ட்மெண்ட்டில் பெற்றோரின்
பிண வாழ்க்கை.
🇮🇳🗿🗿🗿🇮🇳
அமெரிக்காவில் மகனின் பண வாழ்க்கை.
🇦🇺💰💲💵💴💶🇦🇺

எங்கே செல்லும் இந்த பாதை.?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக