சிறுபான்மையின மாணவ, மாணவியர், மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையின மதத்தை சேர்ந்த மற்றும் 2017-18 கல்வி ஆண்டில் 1-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்புகள் வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. அதை பெற www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது, தற்போது செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை சிறுபான்மையின மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக