செவ்வாய், 19 செப்டம்பர், 2017

இனி அனைத்து மாநிலங்களிலும் வரி செலுத்தலாம்!

நாடு முழுவதும் அனைத்து நகரங்களிலும் வருமான வரி செலுத்தும் முறை அக்டோபர்  மாதம் முதல் அமல்படுத்தப்படவுள்ளது.


அக்டோபர் 1ஆம் தேதி முதல் அனைத்து நகரங்களிலும் வருமான வரி செலுத்தும் வசதி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட இருக்கிறது. முதற்கட்டமாக, நாடு முழுவதும் 100 நகரங்கள் இணைக்கப்படும். தற்போதைய நிலையில், வரி செலுத்துவோர் தங்களின் சொந்த மாநிலத்தில் மட்டுமே வரி செலுத்த முடியும். இதனால் பலரும் அவதிப்பட்டு வந்தனர். இதை சரிசெய்யும் வகையில் புதிய வரி செலுத்தும் திட்டத்தை வருமான வரித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி டெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் அக்டோபர் மாதம் முதல் வருமான வரி செலுத்த முடியும். மேலும் இத்திட்டத்தில் 100 நகரங்களை இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், வரி செலுத்துவோரின் தகவல்களை அவர்களின் சொந்த மாநிலத்தில் மட்டுமே அணுக முடியும். இருப்பினும் தற்போது உருவாக்கப்பட்டுள்ள மென்பொருளின்படி, அனைத்து வரி செலுத்துவோரின் தகவல்களையும் வரி அதிகாரிகளால் அணுக முடியும். இதன்மூலம் அனைத்து வரி செலுத்துவோரும் நாடு முழுவதிலும் அனைத்து மாநிலங்களிலும் வரி செலுத்த முடியும். இதற்கான மென்பொருள் தயாராக உள்ளது. எனவே விரைவில் யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் வருமான வரி செலுத்த இயலும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக