பனப்பாக்கம் பள்ளி மாணவிகள் தற்கொலைக்கு ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் இன்று(நவ.30) கறுப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு செல்கின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் பி.கே.இளமாறன் கூறியது:
வேலுார் மாவட்டம், அரக்கோணம் அருகே பனப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவிகள் 4 பேர் தற்கொலை செய்த சம்பவம் பெற்றோர் மட்டுமின்றி, ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மாணவிகளின் குடும்பத்தாருக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம்.
கற்றலில் பின் தங்கிய மாணவ, மாணவிகளை கண்டறிந்து அவர்களை நெறிப்படுத்த, பெற்றோர் -ஆசிரியர் கூட்டு முயற்சியாக எடுக்கப்படும் நட
வடிக்கையாக பெற்றோரை அழைத்து வர சொன்னதற்காக மாணவிகள் தன்னம்பிக்கையை இழந்து எடுத்த தவறான முடிவு அனைவரையும் ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது.
இச்செயலுக்கு ஆசிரியர்கள் காரணம் எனக்கூறி தலைமை ஆசிரியர் ரமாமணி, ஆசிரியர் மீனாட்சி ஆகியோரை சஸ்பெண்ட் செய்தது, ஆசிரியர்
மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு உடனே பணி வழங்க கோரியும், ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தியும், மாணவிகளுக்கு இரங்கல் தெரிவித்தும் இன்று(நவ.30 ) ஜாக்டோ கூட்டமைப்பு, தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர் அமைப்புகளும், கறுப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக